Labels

mazhai mazhai lyrics-moondru per moondru kaadhal tamil song lyrics / மழை மழை

Movie Name:Moondru per moondru kaadhal
Song Name:Mazhai mazhai
Singers:Karthik,Swetha menon
Music Director:Yuvan shankar raja
Lyricist:Na.Muthukumar
Cast:Arjun,Muktha banu
Year of release:2013

Lyrics:-

Mazhai mazhai mazhai oh mazhai
Ennai mattum nanaikkum mazhai
Vittu vittu thurathum mazhai
Penne nee thaan en mazhai

Naan unnaip paartha naalile
Jannal thaandip peithathu mazhai
Nee ennaip paartha naalile
Minnal minni vanthathu mazhai

Alai alai enath thaakkuthe
Mazhaith thaakkuthe mazhai thaakkuthe
Ninai ninai enak ketkuthe
Manam ketkuthe manam ketkuthe aiyo
Anai anai enak kenjuthe
Uyir kenjuthe uyir kenjuthe
Adikkoru murai konjuthe
Unaik konjuthe aiyo

Mutham kettaal vetkam tharuven
Vetkam kettaal vannam tharuven
Kaathuk kidanthaal mella varuven
Thookam keduthu thollai tharuven
Kanavil thottaal thalli viduven
Neril thottaal killi viduven
Nee adangaatha en raatchasi

Poigal sonnaal vaadi viduven
Meendum sonnaal odi viduven
Mazhaiyil vanthaal kudaigal tharuven
Kenjik kettaal konja varuven
Konjik kettaal konjam tharuven
Nee enaik kollum vanadhevadhai

Nee un paadhiyai en paarvaiyil thedinaai
Naan en meedhiyaik kandenenak koovinen
Nenjamennum theevukkulle kaadhal pookka
Vaanum mannum theeyum neerum
Neeyum naanum kaadhalaagi meviyada

Kaadhal endraal sellap paarvai
Aasai endraal kallappaarvai
Oodal endraal konjam kobam
Kobam endraal meendum oodal
Thedal endraal unnul ennai
Thedi vandhaal tholayum penmai
Naan tholainthaalum sugam thaanadi

Thayakkam endraal idhazhin nadanam
Mayakkam endraal manadhin nadanam
Kirakkam endraal kannin nadanam
Kalakkam endraal narambin nadanam
Viruppam endraal vizhiyin nadanam
Nerukkam endraal viralin nadanam
Ini nerungaamal neruppillai

Nee enakkaagave uruvaanaval snegithi
En edhirkaalathin mugam thaanadi kanmani
Nettrai kondru indrai vendru
Naalai seidhaal
Unnaith thottu ennaith htottu
Kaadhalaagi ennap pesum eerak kaatru

Mazhai mazhai ....

மழை மழை மழை ஓ மழை
என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு துரத்தும் மழை
பெண்ணே நீதான் என் மழை

நான் உன்னைப் பார்த்த நாளிலே
ஜன்னல் தாண்டிப் பெய்தது மழை
நீ என்னைப் பார்த்த நாளிலே
மின்னல் மின்னி வந்தது மழை

அலைஅலை எனத் தாக்குதே
மழை தாக்குதே மழை தாக்குதே
நினை நினை எனக் கேட்குதே
மனம் கேட்குதே மனம் கேட்குதே ஐயோ
அணை அணை என கெஞ்சுதே
உயிர் கெஞ்சுதே உயிர் கெஞ்சுதே
அடிக்கொருமுறை கொஞ்சுதே
உனைக் கொஞ்சுதே ஐயோ

முத்தம் கேட்டால் வெட்கம் தருவேன்
வெட்கம் கேட்டால் வண்ணம் தருவேன்
காத்துக் கிடந்தால் மெல்ல வருவேன்
தூக்கம் கெடுத்து தொல்லை தருவேன்
கனவில் தொட்டால் தள்ளிவிடுவேன்
நேரில் தொட்டால் கிள்ளிவிடுவேன்
நீ அடங்காத என் ராட்சசி

பொய்கள் சொன்னால் வாடிவிடுவேன்
மீண்டும் சொன்னால் ஓடிவிடுவேன்
மழையில் வந்தால் குடைகள் தருவேன்
மடியில் வந்தால் உதைகள் தருவேன்
கெஞ்சிக் கேட்டால் கொஞ்ச வருவேன்
கொஞ்சிக் கேட்டால் கொஞ்சம் தருவேன்
நீ எனைக் கொல்லும் வனதேவதை

நீ உன் பாதியை என் பார்வையில் தேடினாய்
நான் என் மீதியைக் கண்டேனெனக் கூவினேன்
நெஞ்சமென்னும் தீவுக்குள்ளே காதல் பூக்க
வானும் மண்ணும் தீயும் நீரும்
நீயும் நானும் காதலாகி மேவியாட

காதலென்றால் செல்லப்பார்வை
ஆசையென்றால் கள்ளப்பார்வை
ஊடலென்றால் கொஞ்சம் கோபம்
கோபமென்றால் மீண்டும் ஊடல்
தேடலென்றால் உன்னுள் என்னை
தேடி வந்தால் தொலையும் பெண்மை
நான் தொலைந்தாலும் சுகம்தானடி

தயக்கமென்றால் இதழின் நடனம்
மயக்கமென்றால் மனதின் நடனம்
கிரக்கமென்றால் கண்ணின் நடனம்
கலக்கமென்றால் நரம்பின் நடனம்
விருப்பமென்றால் விழியின் நடனம்
நெருக்கமென்றால் விரலின் நடனம்
இனி நெருங்காமல் நெருப்பில்லை

நீ எனக்காகவே உருவானவள் சிநேகிதி
என் எதிர்காலத்தின் முகம் தானடி கண்மணி
நேற்றை கொன்று இன்றை வென்று
நாளை செய்தால்
உன்னைத் தொட்டு என்னைத் தொட்டு
காதலாகி என்ன பேசும் ஈரக் காற்று

மழை மழை ....
https://www.youtube.com/watch?v=m-BIRb3Sjis

No comments:

Post a Comment