Labels

vaan engum nee minna lyrics-endrendrum punnagai tamil song lyrics / வான் எங்கும் நீ மின்ன

Movie Name:Endrendrum punnagai
Song Name:Vaan engum nee minna
Singers:Aalaap raju,Harini
Music Director:Harris Jeyaraj
Lyricist:Madhan karky
Cast:Jiiva,Trisha,Vinay
Year of release:2013



Lyrics:-

My love its all for u
The moon and the stars
Shine on u

Vaan engum nee minna minna
Naan enna naan enna panna
En ennak kinnathil nee unnai ootrinaai
Kai alliye ven vinnile
Yen vannam maatrinaai

Vaan engum nee minna minna
Naan enna naan enna panna
En vaanavillile nee nool parikkiraai
Annoolile un nenjinai yen korkka paarkiraai

Oh oh priya priya
Idhayathil adhirvu neeya
Enathu unarvigal thavam kidanthathe
Tharai vantha varam neeya (2)

Pookkal illa ulaginile (2)
Vaazhnthene unnaik kaanum varai
Naan indro poovukkulle sirai
Pen vaasam en vaazhvil illai endrene
Un vaasam nurai eeral naan theenda kandene
Moochum mutta thaan un mel kaadhal kondene

Vaan engum nee minna .....

Paalai ondraai varanthirunthen
Nee kaadhal nadhiyena vanthaai
En vaazhvil pasumaigal thanthaai
EN nenjam neer endraal neenthum meena nee
En kaadhal kaadendraal meyum maana nee
Entha vetkatheeyil kulir kaayum aana nee

Vaan endum nee minna ...

Oh oh priya priya ....

வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் எண்ணக் கிண்ணத்தில் நீ உன்னை ஊற்றினாய்
கை அள்ளியே வெண் விண்ணிலே
ஏன் வண்ணம் மாற்றினாய்

வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய்
அந்நூலிலே உன் நெஞ்சினை ஏன் கோர்க்க பார்க்கிறாய்

ஓ ஓ ப்ரியா ப்ரியா
இதயத்தில் அதிர்வு நீயா
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே
தரை வந்த வரம் நீயா

பூக்கள் இல்லா உலகினிலே
வாழ்ந்தேனே உன்னைக் காணும் வரை
நான் இன்றோ பூவுக்குள்ளே சிறை
பெண் வாசம் என் வாழ்வில் இல்லை என்றேனே
உன் வாசம் நுரை ஈரல் நான் தீண்டக் கண்டேனே
மூச்சும் முட்ட தான் உன் மேல் காதல் கொண்டேனே

வான் எங்கும் நீ மின்ன ....

பாலை ஒன்றை வரைந்திருந்தேன்
நீ காதல் நதியென வந்தாய்
நீ வாழ்வில் பசுமைகள் தந்தை
என் நெஞ்சம் நீர் என்றால் நீந்தும் மீனா நீ
என் காதல் காடென்றால் மேயும் மானா நீ
எந்த வெட்க தீயில் குளிர் காயும் ஆணா நீ

வானெங்கும் நீ மின்ன ....

ஓ ஓ ப்ரியா ப்ரியா ....

http://www.youtube.com/watch?v=d-OQr4MP6Ys



vaanam enna vaanam lyrics-priyamaana thozhi tamil song lyrics / வானம் என்ன வானம்

Movie Name:Priyamana Thozhi
Song Name:Vaanam enna vaanam
Singer:Hariharan
Music Director:S.A.Rajkumar
Lyricist:Pa.Vijay
Cast:Madhavan,Jyothika
Year of release:2003

Lyrics:-

Vaanam enna vaanam thottu vidalaam
Vellum varai vaazhkai vendru vidalaam
Villaaga vaanavillai kaiyil yentha vendum
Ambaaga minnalgalai alli vara vendum

Nilavukku mele nindru jey poda vendum
Vinveliyin mele pulveli vaippom
Puveliyin mele poothuk kidappom

Vaanam enna vaanam ...

Nenjile intha nenjile
Kadal ponguthe aananthamaai
Kaiyile intha kaiyile
Vetri vanthathe aarambamaai
Ada vaazhvil indre thirappu vizha
Ini vaazhkai engum vasanthangala
Kadalukkinge kaigal thatta
Katruth thanthidalaam
Poovukkellaam rekkai katti
Parakkach sollidalaam

Vaanam enna vaanam ....

Sondhamaai oru sooriyan
Antha vanathaik kettaal enna
Illaiyel naam sonthamaai
Oru vaanantha seithaal enna
Ye poove poove ennasirippu
Un vaasam ellaam veettukanuppu
Sigaram enna sigaram ellaam chinnap pulligale
Kaatrukkillai kaatrukkillai mutrup pulligale

Vaanam enna vaanam ....

வானம் என்ன வானம்
தொட்டுவிடலாம்
வெல்லும் வரை வாழ்க்கை வென்று விடலாம்
வில்லாக வானவில்லை கையில் ஏந்த வேண்டும்
அம்பாக மின்னல்களை அள்ளி வரவேண்டும்

நிலவுக்கு மேலே நின்று ஜே போட வேண்டும்
விண்வெளியின் மேலே புல்வெளி வைப்போம்
புல்வெளியின் மேலே பூத்துக் கிடப்போம்

வானம் என்ன வானம் ...

நெஞ்சிலே இந்த நெஞ்சிலே
கடல் பொங்குதே ஆனந்தமாய்
கையிலே இந்த கையிலே
வெற்றி வந்ததே ஆரம்பமாய்
அட வாழ்வில் இன்றே திறப்பு விழா
இனி வாழ்க்கை எங்கும் வசந்தங்களா
கடலுக்கிங்கே கைகள் தட்ட
கற்றுத் தந்திடலாம்
பூவுக்கெல்லாம் றெக்கை கட்டி
பறக்கச் சொல்லிடலாம்

வானம் என்ன ....

சொந்தமாய் ஒரு சூரியன்
அந்த வானத்தைக்கேட்டால் என்ன
இல்லையேல் நாம் சொந்தமாய்
ஒரு வானத்தத செய்தால் என்ன
ஏ பூவே பூவே என்ன சிரிப்பு
உன் வாசம் எல்லாம் வீட்டுக்கனுப்பு
சிகரம் என்ன சிகரம் எல்லாம் சின்னப்புள்ளிகளே
காற்றுக்கில்லை காற்றுக்கில்லை முற்றுபுள்ளிகளே

வானம் என்ன ....



http://www.youtube.com/watch?v=Oh58-OVbYiw




pineapple vannathodu lyrics-samudhiram tamil song lyrics / பைனாப்பிள் வண்ணத்தோடு

Movie Name:Samuthiram
Song Name:Pineapple vannathodu
Singers:Shankar Mahadevan,Sujatha
Music Director:Sabesh-Murali
Cast:Sarath kumar,Murali,Manoj,Abhirami
Year of release:2001

Lyrics:-

Pineapple vannathodu red apple kannathodu
Jillendru thaan sikkendru thaan en angel pogiraal (2)

Anbe un hormonegal ellaam
Ovvondrum harmonyangal
Sweety un angangalellaam
Saththulla A Vitamingal
Un kangal Laser pottu
Ennai mattum paarkkuthe

Pineapple vannathodu ...

Keralathu pengal special enna endraal
Maiyoorum kan azhagu thaan
Andhravin pengal special enna endraal
Seeraana koor mookku thaan
Panjabi pengalin special naan sollava ?
Badamin vanname
Tamil naattup pengalin specialgal sollava ?
Rojappoo vatkamum minsaara pechum thaan
Anbe en special enna neeyum ingu sollada?
Anaithu maanilangal ondru sernthathallava

Pineapple vannathodu ....

Pookkal 20kg thiraatchai 20kg mix aana un meniyo
Thangam 30kg singam 30kg mix aana un roobamo
Icecream thaan un idhazh teaspoon thaan en idhazh
Unnaamal karaiyuthe
Guitarum en udal sitharum en udal
Nee konjam theendinaal light music ketkalaam
Poonthottam unnaip paarthu autographum ketkuthe
Ye ye ye miss worldin kangal kooda
Unnaith thaane theduthe

Pineapple vannathodu ...

பைனாப்பிள் வண்ணத்தோடு ரெட் ஆப்பிள் கன்னத்தோடு
சில்லென்றுதான் சிக்கென்றுதான் என் ஏஞ்சல் போகிறாள் (2)
அன்பே உன் ஹார்மோன்கள் எல்லாம்
ஒவ்வொன்றும் காமோயங்கள்
ஸ்வீட்டி உன் அங்கங்களெல்லாம்
சத்துள்ள A வைட்டமின்கள்
உன் கண்கள் லேசர் பொட்டு
என்னை மட்டும் பார்க்குதே

பைனாப்பிள் வண்ணத்தோடு ....

கேரளத்து பெண்கள் ஸ்பெஷல் என்ன என்றால்
மையூறும் கண் அழகுதான்
ஆந்திராவின் பெண்கள் ஸ்பெஷல் என்ன என்றால்
சீரான கூர் மூக்குதான்
பஞ்சாபி பெண்களின் ஸ்பெஷல் நான் சொல்லவா?
பாதாமின் வண்ணமே
தமிழ் நாட்டு பெண்களில் ஸ்பெஷல்கள் சொல்லவா?
ரோஜாப்பூ வெட்கமும் மின்சார பேச்சும் தான்
அன்பே என் ஸ்பெஷல் என்ன நீயும் இங்கு சொல்லடா?
அனைத்து மாநிலங்கள் ஒன்று சேர்ந்ததல்லவா

பைனாப்பிள் வண்ணத்தோடு ....

பூக்கள் 20KG திராட்சை 20KG மிக்ஸ் ஆன உன் மேனியோ
தங்கம் 30KG சிங்கம் 30KG மிக்ஸ் ஆன உன் ரூபமோ
ஐஸ்க்ரீம் தான் உன் இதழ் டீ ஸ்பூந்தான் என் இதழ்
உண்ணாமல் கரையுதே
கீட்டாரும் என் உடல் சித்தாரும் என் உடல்
நீ கொஞ்சம் தீண்டினால் லைக்ட் மியூசிக் கேட்கலாம்
பூந்தோட்டம் உன்னை பார்த்து ஆட்டோகிராஃபும் கேட்குதே
யே யே யே .. மிஸ் வோர்ல்டின் கண்கள் கூட
உன்னை தானே தேடுதே..

பைனாப்பிள்  ....
 
https://www.youtube.com/watch?v=HaycBKigJQk
 
 

vidhai pola maraivaaga lyrics-singam 2 tamil song lyrics / விதி போல மறைவாக

Movie Name:Singam 2
Song Name:Vidhai pola maraivaga
Singer:Hariharan
Music Director:Devi Sri Prasad
Cast:Surya,Anushka Shetty,Hansika Motwani
Year of release:2013

Lyrics:-

Vidhai pola maraivaaga
Vazzhnthavan indru thaan
Madha yaanai pol varugiraan
Adaiyaalam theiryaatha udaiyodu thirinthavan
Padaiyodu nadai payalgiraan

Imai pozhuthum urangaatha kavalan
Ivan sumai kondu miralaatha sevagan
Kolgaiyil maaratha komagan
Ivan thisai engum kaathidum thirumagan

Idi vanthu vizhunthaalum idiyaathavan
Idar enna vanthaalum idaraathavan
Padharamal sidharamal adhiramal udhiramal
Irukindra varam petravan

Charanam - 1

Pagai enna vanthaalum padharathavan
Padhavigal thaduthaalum paniyaathavan
Oor koodi edhirthaalum miralaathavan
Otraiyaai pala perai vadham seithavan

Edhirigal evar endru ennaathavan
Tholvigal vilumbilum thuvalaathavan
Vilai enna thanthaalum valaiyaathavan
Elimakku ivan endrum thunaiyaanavan

Malaiyaaga nindru marporilvendru
Adutha kanam edhuvendru
Anjaamal kalamaaduvan

Vidhai pola maraivaaga
Vaazhnthavan indru thaan
Madha yaanaip pol varugiraan
Adaiyaalam theriyaatha
Udaiyodu thirinthavan
Padaiyodu nadai payalgiraan

Charanam - 2

Thaniyaaga irunthaalum padai thaan ivan
Tharaniyaip prlakkindra edai thaan ivan
Pulan ainthum thelivaaga irukkindravan
Puram naangum elithaaga valikkindravan

Udaiyaatha thadaigalai udaikkindravan
Unmaiyaai saadhainai padaikkindravan
Eri malai kozhumbaaga kodhikkindravan
Kuri vaithu samarile jeyikkindravan

Minnal ena seeri amila mazhaith thoovi
Azhukkindri desaththai
Azhagaaga thudaikkindravan

Vidhai pola maraivaaga
Vaazhnthavan indru thaan
Madha yaanai pol varugiraan
Adaiyaalam theriyaatha
Udaiyodu thirinthavan
Padaiyodu nadai payilgiraan

விதை போல மறைவாக
வாழ்ந்தவன் இன்று தான்
மத யானை போல் வருகிறான்
அடையாளம் தெரியாத உடையோடு திரிந்தவன்
படையோடு நடை பயல்கிறான்

இமை பொழுதும் உறங்காத காவலன்
இவன் சுமை கண்டு மிரளாத சேவகன்
கொள்கையில் மாறாத கோமகன்
இவன் திசை எங்கும் காத்திடும் திருமகன்

இடி வந்து விழுந்தாலும் இடியாதவன்
இடர் என்ன வந்தாலும் இடறாதவன்
பதறாமல் சிதறாமல் அதிராமல் உதிராமல்
இருக்கின்ற வரம் பெற்றவன்

சரணம் - 1

பகை என்ன என்ன வந்தாலும் பதறாதவன்
பதவிகள் தடுத்தாலும் பணியாதவன்
ஊர் கூடி எதிர்த்தாலும் மிரளாதவன்
ஒற்றையாய் பல பேரை வதம் செய்தவன்

எதிரிகள் எவர் என்று எண்ணாதவன்
தோல்வியின் விளும்பிலும் துவளாதவன்
விலை என்ன தந்தாலும் வளையாதவன்
எளிமைக்கு இவன் என்றும் துணையானவன்

மலையாக நின்று மற் போரில் வென்று
அடுத்த கணம் எதுவென்று
அஞ்சாமல் களமாடுவான்

விதை போல மறைவாக
வாழ்ந்தவன் இன்று தான்
மத யானை போல் வருகிறான்
அடையாளம் தெரியாத
உடையோடு திரிந்தவன்
படையோடு நடை பயல்கிறான்

சரணம் - 2

தனியாக இருந்தாலும் படை தான் இவன்
தரணியை பிளக்கின்ற எடை தான் இவன்
புலன் ஐந்தும் தெளிவாக இருக்கின்றவன்
புறம் நான்கும் எளிதாக வளைக்கின்றவன்

உடையாத தடைகளை உடைக்கின்றவன்
உண்மையாய் சாதனை படைக்கின்றவன்
எரி மலை கொழும்பாக கொதிக்கின்றவன்
குறி வைத்து சமரிலே ஜெயிக்கின்றவன்

மின்னல் என சீறி அமில மழை தூவி
அழுக்கின்றி தேசத்தை
அழகாக துடைக்கின்றவன்

விதை போல மறைவாக
வாழ்ந்தவன் இன்று தான்
மத யானை போல் வருகிறான்
அடையாளம் தெரியாத
உடையோடு திரிந்தவன்
படையோடு நடை பயல்கிறான்

http://www.youtube.com/watch?v=odpXHSKt-zA



poovannam pola nenjam lyrics-azhiyaatha kolangal tamil song lyrics / பூவண்ணம் போல நெஞ்சம்

Movie Name:Azhiyaatha kolangal
Song Name:Poo vannam pola nenjam
Singers:P.Susheela,Jeyachandhran
Music Director:Salil chowdhry
Lyricist:Gangai amaran
Cast:Prathap.K.Pothan,Shoba
Year of release:1979

Lyrics:-

Poovannam pola nenjam
Boobalam paadum neram pongi nirkkum dhinam
Engengum inba raagam en ullam podum thaalam (2)

Poovannam pola nenje hey ..yehey

Inikkum vaazhvile en sontham nee
Enakkul vaazhnthidum en dheivam nee
Pirakkum jenmangal piraikkum bandhangal
Endrendrum nee (2)
Inaintha vaazhvil pirivum illai thanimaiyum illai
Piranthaal entha naalum unnodu sera vendum

Poovannam pola nenjam ...

Padikkum paadamo un ullangal
Thudikkum vegamo en vellangal
Kanikkul vaattangal anaikkum oottangal
En inbangal (2)
Inaiyum pothu iniya ennam endrum nam sondham
Imaikkul yezhu thaalam endrendrum kaana vendum

Poovannam pola nenjam ....

பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம் என்னுள்ளம் போடும் தாளம் (2)

பூவண்ணம் போல நெஞ்சே.. ஹே.. ஏஹே..

இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ
பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும் பந்தங்கள்
என்றென்றும் நீ (2)
இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை தனிமையும் இல்லை
பிறந்தால் எந்த நாளும் உன்னோடு சேர வேண்டும்

பூவண்ணம் போல நெஞ்சம் ....

படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்
கனிக்குள் வாட்டங்கள் அணைக்கும் ஊட்டங்கள்
என் இன்பங்கள் (2)
இணையும்போது இனிய எண்ணம் என்றும் நம் சொந்தம்
இமைக்குள் ஏழு தாளம் என்றென்றும் காண வேண்டும்

பூவண்ணம் போல நெஞ்சம் ....

http://www.youtube.com/watch?v=NuWKYZZPXc4


vaa vaa nilava lyrics-naan mahaan alla tamil song lyrics / வா வா நிலவ புடிச்சி

Movie Name:Naan mahaan alla
Song Name:Vaa vaa nilava
Singers:Rahul Nambiyar
Music Director:Yuvan Shankar Raja
Lyricist:Na.Muthukumar
Cast:Karthi,Kajal Agarwal
Year of release:2010

Lyrics:-

Vaa vaa nilava pudichi tharava
Velli bommaiyaakki tharava
Oho vidiyum pothu thaan marainju pogumo
Kattip podu medhuva (2)

Vaanathil yeri yeni kattu
Megathai ali maala kattu

Vaa vaa kattalaam anbaal padikattu (2)

Vaa vaa nilava ....

Kavalai nammai silaneram koodu pottu kondaadum
Nee ennaith theendi vaazhum podhe
Deepathil velicham undaagum
Kadalaich serum nadhiyum thannai tholaithu uppaagum
Aayinum kooda mazhaiyaai maari
Meendum adhuve muthaagum
Oru vattam pole vaazhvaagum
Vaasalgal illa kanavaagum
Adhil mudhalum illai mudivum illai
Purinthaal thuyaram illai

Vaa vaa kattlaam anbaal padikattu (2)

Aah iravai paarthu miralaathe
Idhayam verthu thuvalaathe
Iravugal mattum illai endraal
Nilavin azhagu theriyaathe
Kanavil pookkum pookkal elaam
Kaigalil parithida mudiyaathe
Antha vaanam pole uravaagum
Megangal dhinamum varum pogum
Ada vanthu ponaal marubadi ondru
Pudhithaai uruvaagum

Vaa vaa kattalaam anbaal padikattu (2)

வா வா நிலவ புடிச்சி தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ
கட்டிப்போடு மெதுவா (2)

வானத்தில் ஏறி ஏணிக்கட்டு
மேகத்தை அள்ளி மாலைக்கட்டு

வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு (2)

வா வா நிலவ ....

கவலை நம்மை சிலநேரம் கூடப்போட்டு கொண்டாடும்
நீ என்னை தீண்டி வாழும்போதே
தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
கடலை சேரும் நதியும் தன்னை தொலைத்து உப்பாகும்
ஆயினும்கூட மழையாய் மாறி
மீண்டும் அதுவே முத்தாகும்
ஒரு வட்டம் போலே வாழ்வாகும்
வாசல்கள் இல்லா கனவாகும்
அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை
புரிந்தால் துயரம் இல்லை

வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு (2)

வா வா நிலவ ....

ஆ ஹா இரவை பார்த்து மிரளாதே
இதயம் வேர்த்து துவளாதே
இரவுகள் மட்டும் இல்லையென்றால்
நிலவின் அழகு தெரியாதே
கனவில் பூக்கும் பூக்கள் எல்லாம்
கைகளில் பறித்திட முடியாதே
அந்த வானம் போலே உறவாகும்
மேகங்கள் தினமும் வரும் போகும்
அட வந்து போனால் மறுபடி ஒன்று
புதியதாய் உருவாகும்

வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு (2)


http://www.youtube.com/watch?v=SNcz4DMeEVw



ennada ennada lyrics-varutha padatha valibar sangam tamil song lyrics / என்னடா என்னடா

Movie Name:Varutha padatha vaalibar sangam
Song Name:Ennada ennada
Singers:Shreya Goshal,Suraj Santhosh
Music Director:D.Imman
Lyricist:Yuga bharathi
Cast:Sivakarthikeyan,Divya,Sathyaraj
Year of release:2013

Lyrics:-

Ennada ennada ennada ennada
Ennada ennada unnaale thollaiya pochu
Sollave illaiye thannaale ennavo aachu
Aaraamal polamba vidum paarthaale padhungi vidum
Vaal paiyan nee thaan ada

Ennada ennada unnaale thollaiya pochu
Sollave illaiye thannaale ennavo oaachu

Naan oyaatha vaayadi pesaama ponen
Pottuch chedi naan muttu vedichen
Ozhungaana maathiri naanum velangaama pogurene
Vidinjaalum thoongura aalu orangaama yengurene
Unnoda pesidave un nooru aasak koodip pochu
Kannaadi paathidavum ennoda dhegam
Maariye pochu pochu

Ennada ennada unnaale thollaiya pochu
Sollave illaiye ...

Mm nee lesaaa paarthaalum loosagip poren
Pacha neruppa pathikiduren
Vilaiyaattup bommaiyap pola odanjene naanum kooda
Aniyaayam pannura kaadhal adangaama aattam poda
Pollaadha un nenappu eppodhum
Pottip pottuk kolla
Pogaatha koyilukkum naan poven
Poosa panna thaan enna solla
Ennada ho ennada

Ennada ennada ennada ennada
Ho ennada ennada unnaale thollaiya pochu
Sollave illaiye thannaale ennavo aachu
Aaramal polamba vidum paarthaale padhungi vidum
Vaal paiyan nee thaan ada

Ennada ennada ennada ennada

என்னடா என்னடா என்னடா என்னடா
என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு
ஆறாமல் பொலம்பவிடும் பார்த்தாலே பதுங்கிவிடும்
வால் பையன் நீதானடா

என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு

நான் ஓயாத வாயாடி பேசாம போனேன்
பொட்டுச் செடி நான் முட்டு வெடிச்சேன்
ஒழுங்கான மாதிரி நானு வெளங்காம போகுறேனே
விடிஞ்சாலும் தூங்குற ஆளு ஒரங்காம ஏங்குறேனே
உன்னோட பேசிடவே உள் நூறு ஆச கூடிப்போச்சு
கண்ணாடி பாத்திடவும் என்னோட தேகம்
மாறியே போச்சு போச்சு

என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே இல்லையே ..

ம் நீ லேசாக பார்த்தாலும் லூசாகிப் போறேன்
பச்ச நெருப்பா பத்திகிடுறேன்
விளையாட்டுப் பொம்மைய போல ஒடஞ்சேனே நானும் கூட
அநியாயம் பண்ணுற காதல் அடங்காம ஆட்டம் போட
பொல்லாத உன் நெனப்பு எப்போதும்
போட்டிப் போட்டுக் கொல்ல
போகாத கோயிலுக்கும் நான் போவேன்
பூச பண்ண தான் என்ன சொல்ல
என்னடா ஹோ என்னடா

என்னடா என்னடா என்னடா என்னடா
ஹோ என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு
ஆறாமல் பொலம்பவிடும் பார்த்தாலே பதுங்கிவிடும்
வால் பையன் நீதானடா

என்னடா என்னடா என்னடா என்னடா

http://www.youtube.com/watch?v=Pg1fHli1c5o



uchanthala uchiyila lyrics-chinna thambi tamil song lyrics / உச்சந்தல உச்சியில

Movie Name:Chinna thambi
Song Name:Uchanthala uchiyila
Singer:Mano
Music Director:Ilaiyaraja
Lyricist:Gangai amaran
Cast:Prabhu,Kushboo
Year of release:1991

Lyrics:-

Ada uchanthala uchiyila ullirukkum pudhiyila paattu
Idhu appan solli vanthathilla
Paattan solli thanthathilla nethu
Eppadith thaan vanthathunnu solluravan yaaru
Idhil thappiruntha ennuthilla
Saami kitta kelu

Kanmaayi neranjaalum adhaip paaduven
Nellu kadhir muthi mulaichaalum
Adhaip paaduven
Puliyam poo poothalum adhaip paaduven
Pacha pani mele pani thoongum
Adhaip paaduven
Sevvaanatha paartha chinna chittugala paartha
Semmariya paartha siru siterumba paartha
Ennaik kekkaamale pongi varum
Karpanai thaan poothu varum
Paattu tamil paattu

Themmaangu kili kanni thaen sinthu thaan innum
Thaalaattu thanip paattu esappaattu thaan
En paattu ithu pola pala maathiri
Sonna eduppene padippene kuyil maathiri
Thaayala thaan vanthen
Ingup paattala thaan valarnthen
Veraaraiyum nambi inge valle chinna thambi
Ingu naan irukkum kaalam mattum
Kettirukkum thikku ettum
Paattu enthan paattu

உச்சந்தல உச்சியில உள்ளிருக்கும் புத்தியில பாட்டு
இது அப்பன் சொல்லி வந்ததில்ல
பாட்டன் சொல்லி தந்ததில்ல நேத்து
எப்படிதான் வந்ததுன்னு சொல்லுறவன் யாரு
இதில் தப்பிருந்தா என்னுதில்ல
சாமிகிட்ட கேளு

கண்மாயி நெறஞ்சாலும் அதை பாடுவேன்
நெல்லு கதிர் முத்தி முளைச்சாலும்
அதை பாடுவேன்
புளியம் பூ பூத்தாலும் அதை பாடுவேன்
பச்ச பனி மேலே பனி தூங்கும்
அதை பாடுவேன்
செவ்வானத்த பார்த்தா சின்ன சிட்டுகள பார்த்தா
செம்மறிய பார்த்தா சிறு சித்தெறும்ப பார்த்தா
என்னை கேட்காமலே பொங்கிவரும்
கற்பனைதான் பூத்து வரும் பாட்டு தமிழ் பாட்டு

தெம்மாங்கு கிளிகண்ணி தேன் சிந்துதான் இன்னும்
தாலாட்டு தனிப்பாட்டு எசப்பாட்டுதான்
என் பாட்டு இது போல பல மாதிரி
சொன்ன எடுப்பேனே படிப்பேனே குயில் மாதிரி
தாயாலதான் வந்தேன் இங்கு பாட்டாலதான் வளர்ந்தேன்
வேறாரையும் நம்பி இங்கே வல்லே சின்ன தம்பி
இங்கு நான் இருக்கும் காலம் மட்டும்
கேட்டிருக்கும் திக்கு எட்டும் பாட்டு எந்தன் பாட்டு

http://www.youtube.com/watch?v=Dx0CIIjQLYg



sara sara saara kaathu lyrics-vaagai sooda vaa tamil song lyrics / சர சர சார காத்து

Movie Name:Vaagai sooda vaa
Song Name:Sara sara saara kaathu
Singer:Chinmayee
Music Director:M.Ghibran
Lyricist:Vairamuthu
Cast:Vimal,Iniya
Year of release:2011

Lyrics:-

Sara sara saara kaathu veesum podhum
Sir-ra paathu pesum podhum
Saara paambu pola nenju satham poduthe (2)

Iththu iththu iththu pona nenja thaikka
Otha paarva paathu sellu
Motha soththa ezhuthith thaaren
Moochu utpada (2)

Tea pola nee enna yen aathura

Sara sara saara kaathu ....

Enga ooru pidikkutha enga thanni inikkutha ?
Suthi varum kaathula sutta eeral manakkutha ?
Mutta kozhi pidikkava murappadi samaikkava ?
Elumbathu kadikkaiyil ennak konjam nenaikkava ?
Kammanjoru rusikka vaa
Samaicha kaiya konjam rasikka vaa
Modakkathaan rasam vachu madakka thaan paakuren
Retta dosai suttu vachu kaava kaakkuren
Mukkannu nungu naan vikkiren
Mandu nee gangaiye kekkura

Sara sara saara kaathu ....

Pullu kaattu vaasma pudhikkulla veesura
Maattu mani sathama manasukkul ketkura
Katta vandi ottura kaiyalavu manasula
Kaiyezhuthu podura kanni ponnu maarbula
Moonu naala paakkala ooril endha poovum pookkala
Aattuk kallu kuzhiyila orangip pogum poonaiya
Vanthu vanthup paathu thaan kerangip porenya
Meenukku yengura kokku nee
Koththave theriyala makku nee

Sara sara saara kaathu .... (2)

Iththu iththu .... (2)

Tea pola nee aathura

Kaattu malliga poothirukku kaadhala kaadhala
Vanthu vanthu odip pogum vandukkenna kaaichala

சர சர சார காத்து வீசும் போதும்
சார பாத்து பேசும் போதும்
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே(2)

இத்து இத்து இத்து போன நெஞ்ச தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதித் தாரேன்
மூச்சு உட்ப (2)

டீ.. போல நீ என்ன ஏன்.. ஆத்துர

சர சர சார காத்து ....

எங்க ஊரு பிடிக்குதா எங்க தண்ணி இனிக்குதா ?
சுத்தி வரும் காத்துல சுட்ட ஈரல் மணக்குதா ?
முட்ட கோழி பிடிக்கவா முறைப்படி சமைக்கவா?
எலும்பது கடிக்கையில்
என்னக் கொஞ்சம் நெனைக்கவா ?
கம்மஞ்சோறு ருசிக்க வா
சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்கவா
மொடக்கதான் ரசம் வச்சு மடக்கதான் பாக்குறேன்
ரெட்டை தோசை சுட்டு வெச்சு காவ காக்குறேன்
முக்கன்னு நுங்கு நான் விக்கிறேன்
மண்டு நீ கங்கையே கேக்குற

சர சர சார காத்து ....

புல்லு காட்டு வாசமா புத்திக்குள்ள வீசுர
மாட்டு மணி சத்தமா மனசுக்குள் கேட்குரே
கட்ட வண்டி ஒட்டுர கையளவு மனசுல
கையெழுத்து போடுற கன்னி பொண்ணு மார்புல
மூணு நாளா பாக்கல..ஊரில் எந்த பூவும் பூக்கல
ஆட்டுக் கல்லு குழியில ஒரங்கிப் போகும் பூனையா
வந்து வந்துப் பாத்துத்தான் கிரங்கிப் போறேன்யா
மீனுக்கு ஏங்குற கொக்கு நீ
கொத்தவே தெரியல மக்கு நீ

சர சர சார காத்து ... (2)

இத்து இத்து (2)

டீ.. போல நீ ஆத்துர

காட்டு மல்லிக பூத்திருக்கு காதலா காதலா
வந்து வந்து ஓடிபோகும் வண்டுக்கென்ன காய்ச்சலா

http://www.youtube.com/watch?v=xxjvz-WGhaE



dang dang lyrics-manam kothi paravai tamil song lyrics / டங் டங் டிகடிக டங் டங்

Movie Name:Manam kothi paravai
Song Name:Dang dang
Singers:Saicharan,Malavika
Music Director:D.Imman
Lyricist:Yuga bharathi
Cast:Sivakarthikeyan,Aathmya
Year of release:2012

Lyrics:-

Dang dang diga diga dang dang (4)

Aiyayyo vaadi pulla aal illa veettukulla
Aiyayyo vaadi pulla aal illa veettukulla
Vechikka enna vaazha vazhukkatha paasi pola
Vechikka enna vaazha vazhukkaatha paasi pola

Dang dang diga diga dang dang
Dang dang diga diga dang dang

Aiyayyo aagaathunga adhu mattum venaamunga
Aiyayyo aagaathunga adhu mattum venaamunga
Ennaikku thannimela irukkaatha aasa ponga
Ennaikku thanni mela irukkaatha aasa ponga

Dang dang diga diga dang dang
Dang dang diga diga dang dang

Aarunna kaaveriyaam anbunna aiya neeyaam
Aarunna kaaveriyaam anbunna aiya neeyaam
Oorunna tanjavoru un pola inge yaaru
Kuthunna tappanguthu kummunna un pola
Muthunna aani muthu moodatha enna paathu
Javvunna javvu mittaai jangunnu thullaatha nee
Lovvunna enna sollu raavaga summa nillu
Aiyo nee poriyedi alwavum thaariyedi

Dang dang ....

Aachinna manorama pechunna paappaiya thaan
Aachinna manoramma pechunna paappaiya thaan
Moochunna neeye thandi muzhusa nee poyen theendi
Oorunna vekka pooru veenaaga akka poru
Thaarunna vaazha thaaru tharuvene mutham nooru
Hey kattunna unna mattum illenna sanniyaasam
Vettunna thundu rendu velagaatha ennak kandu
Yengaathe enga poven eppo naan amma aaven

Dang dang ....

டங் டங் டிகடிக டங் டங்
டங் டங் டிகடிக டங் டங்
அய்யய்யோ வாடி புள்ள ஆளில்ல வீட்டுக்குள்ளே
வெச்சிக்கோ என்ன வாழ வழுக்காத பாசி போல

டங் டங் டிகடிக டங் டங்
டங் டங் டிகடிக டங் டங்

அய்யய்யோ ஆகாதுங்க அதுமட்டும் வேணாமுங்க
எண்ணைக்கு தண்ணி மேலே இருக்காதா ஆச போங்க

டங் டங் டிகடிக டங் டங்
டங் டங் டிகடிக டங் டங்

ஆறுன்னா காவேரியா அன்புன்னா அய்யா நீயா
ஊருன்னா தஞ்சாவ{ரு உன் போல இங்கு யாரு
குத்துண்ணா டப்பாங்குத்து கும்முன்னா உன்ன போல
முத்துன்னா ஆணி முத்து மூடாத என்னைப் பார்த்து
ஜவ்வுன்னா ஜவ்வுமிட்டாய் ஐந்துன்னா துள்ளாத நீ
லவ்வுன்னா என்னைச்சொல்லு ராவாக சும்மா நில்லு
அய்யோ போறியேடி அல்வாவும் தாரியேடி

டங் டங் டிகடிக டங் டங்
டங் டங் டிகடிக டங் டங்

ஆச்சின்னா மனோரமா பேச்சுன்னா பாப்பையா தான்
ஆச்சின்னா மனோரமா பேச்சுன்னா பாப்பையா தான்
மூசுன்னா நீயே தண்டி முழுசா நீ போயேன் தீண்டி
ஊருன்னா வெக்க பூரு வீணாக ஆக்க போரு
தாருன்னா வாழ தாறு தருவேனே முத்தம் நூறு
ஹே கட்டுன்னா உன்ன மட்டும் இல்லேன்னா சந்நியாசம்
வெட்டுன்னா துண்டு ரெண்டு வெலகாத என்னக் கண்டு
ஏங்காதே எங்க போவேன் எப்போ நான் அம்மா ஆவேன்

டங் டங் ....



http://www.youtube.com/watch?v=O6PBv7mvY5M




pattu pattu lyrics-thillalangadi tamil song lyrics / பட்டு பட்டு

Movie Name:Thillalangadi
Song Name:Pattu pattu pattampoochi
Singers:Simbu,Manasi
Music Director:Yuvan Shankar Raja
Lyricist:Na.Muthukumar
Cast:Jeyam Ravi,Tamannah
Year of release:2010

Lyrics:-

Pattu pattu pattaampoochi
Vittu vittu kannaampoochi
Pattu pattu pattaampoochi
Vittu vittu kannaampoochi
Maatti kichu maattikkichu

Adi thathi thathi nee oduna
Ippa suthi suthi ennath thedura
Innum ennadi thayangura odi vaa odi vaa
Vaare vaa vaa vaa vaa
Naama thaan sooper jodi sernthu thaan
Katti kittu ottik kittu koothuk kattalaam
Vaare vaa vaa vaa
Un pechai kettaale
Ennoda vetkam ellaame
Leave pottu odip pochu daa

Pattu pattu ...

Kada kada rayilap poda thadath thada satham pottu
Nenjukkulla suthi vanthayae yeno
Purappadum oorum nee thaan
Sernthidum oorum nee thaan
Unakkulla suthi vanthene naane
Ye pasikkira neram paarkkuren un mugam
Enna vida onnath thaane romba pidikkum
Vaare vaa vaa vaa vaa
Unthan moochu pattaale
Moolaiyil roja thottam pookkum
Vaasam aalaith thookkum
Vaare vaa vaa vaa vaa
Nee thaan enge ponaalum
Koodave po po
Endru kaadhal nenjam kenjik ketkum

Vidu vidu sollip paarthen
Vidumurai kettup paarthen
Vidavilla onna en nenjam yeno
Edhurula nikkum podhum
Engo thalli nikkum pogum podhum
Piriyave illa innum yeno
Unakkaaga bhoomiyile poranthava naan ada
Oru kural kaattukkulle ketkirathe
Vaare vaa vaa  vaa
Oru kaathaadi pola
Un sela noolil maatti vaalai aatti
Vaanil ponene
Vaare vaa vaa vaa ennai kaappaatha vaada
Unnoda mutha kaatru yerum paattu sooda aanene

Pattu pattu ....

பட்டு பட்டு பட்டாம்பூச்சி
விட்டு விடு கண்ணாம்பூச்சி
பட்டு பட்டு பட்டாம்பூச்சி
விட்டு விடு கண்ணாம்பூச்சி
மாட்டி கிச்சு மாட்டிக்கிச்சு ஹ ஹ ஹ

அடி தத்தி தத்தி நீ ஓடுன
இப்ப சுத்தி சுத்தி என்னை தேடுற
இன்னும் என்னடி தயங்குற ஓடிவா ஓடிவா
வாரே வா வா வா வா
நாமதான் சூப்பர் ஜோடி சேர்ந்துதான்
கட்டி கிட்டு ஒட்டிக்கிட்டு கூத்துக்கட்டலாம்
வாரே வா வா வா
உன் பேச்சை கேட்டல
என்னோட வெட்கம் எல்லாமே லீவுப்போட்டு ஓடிப்போச்சுடா

பட்டு ...

கடகட ரயிலப்போட தடத்த்ட சத்தம் போட்டு
நெஞ்சுக்குள்ளா சுத்தி வந்தாயே ஏனோ
புறப்படும் ஊரும் நீதான் சேர்ந்திடும் ஊரும் நீதான்
உனக்குள்ள சுத்திவந்தேனே நானே
யே பசிக்கிற நேரம் பார்க்குறேன் உன் முகம்
என்ன விட ஒன்னத்தானே ரொம்ப பிடிக்கும்
வாரே வா வா வா வா
உந்தன் மூச்சு பட்டாலே
மூளையில் ரோஜா தோட்டம் பூக்கும்
வாசம் ஆளை தூக்கும்
வாரே வா வா வா வா
நீதான் எங்கே போனாலும்
கூடவே போ போ என்று காதல் நெஞ்சம் கெஞ்சி கேட்கும்

விடு விடு சொல்லி பார்த்தேன்
விடுமுறை கேட்டு பார்த்தேன்
விடவில்ல ஒன்னா என் நெஞ்சம் ஏனோ
எதுருள்ள நிக்கும்போதும் எங்கோ தள்ளி போகும்போதும்
பிரியவே இல்லை இன்னும் ஏனோ
உனக்காக பூமியிலே பொறந்தவ நானடா
ஒரு குரல் காட்டுக்குள்ளே கேட்கிறதே
வாரே வா வா வா
ஒரு காத்தாடி போல
உன் சேல நூலில் மாட்டி வாலை ஆட்டி
வானில் போனேனே
வாரே வா வா வா என்னை காப்பாத்த வாடா
உன்னோட முத்த காற்று ஏறும் பாட்டு சூடா ஆனேனே

பட்டு ...

http://www.youtube.com/watch?v=0lNyKqTa8AM



ennai saaithale lyrics-endrendrum punnagai tamil song lyrics / என்னை சாய்த்தாளே

Movie Name:Endrendrum punnagai
Song Name:Ennai saaithale
Singers:Hariharan,Shreya Goshal
Music Director:Harris Jeyaraj
Lyricist:Thaamarai
Cast:Jiiva,Trisha,Vinay
Year of release:2013

Lyrics:-

Ennai saaithaale uyir theithaale
Ini vaazhveno inithaaga
Thadumaaramal tharai mothamal
Ini meelveno muzhuthaaga

Idhazhorathil nangai poothaale
En paavangal theerthen
Mazhai eerathil nanaiyaamal naan
Veliyera thaan paarthen
Nadakkira varai nagargira tharai
Athan mel thavikkiren
Vizhigalil pizhai vizhugira thirai
Adhanaal thigaikkiren

Netru pole vaanam ada indru kooda neelam
En naatkal thaan neelum
Thallip poga ennum kaal pakkam vanthu pinnum
Ketkaathe yaar sollum
Paravai naan siragu nee
Naan kaatrai vella aasaik konden
Payanam naan vazhigal nee
Naan ellaith thaandi sellak kanden

Ennai saaithaale ....

Maalai vanthaal podhum Oru nootril pathil dhegam
Sengaanthal pol kaayum
Kaatru vanthu modhum Un kaigal endre thondrum
Pin yemaatram theendum
Thavippathai maraikkiren
En poiyai poottu vaithu konden
Kanavile vizhikkiren
En kaiil saavi ondraik kanden

Ennai saaithaale ...

என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக

இதழோரத்தில் நங்கை பூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன்
மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேற தான் பார்த்தேன்
நடக்கிற வரை நகர்கிற தரை
அதன் மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்

நேற்று போலே வானம் அட இன்று கூட நீலம்
என் நாட்கள் தான் நீழும்
தள்ளிப் போக எண்ணும் கால் பக்கம் வந்து பின்னும்
கேட்காதே யார் சொல்லும்
பறவை நான் சிறகு நீ
நான் காற்றை வெல்ல ஆசைக் கொண்டேன்
பயணம் நான் வழிகள் நீ
நான் எல்லைத் தாண்டிச் செல்லக் கண்டேன்

என்னைச் சாய்த்தாளே ....

மாலை வந்தால் போதும் ஒரு நூற்றில் பதில் தேகம்
செங்காந்தள் போல் காயும்
காற்று வந்து மோதும் உன் கைகள் என்றே தோன்றும்
பின் ஏமாற்றம் தீண்டும்
தவிப்பதை மறைக்கிறேன்
என் பொய்யைப் பூட்டு வைத்துக் கொண்டேன்
கனவிலே விழிக்கிறேன்
என் கையில் சாவி ஒன்றைக் கண்டேன்

என்னைச் சாய்த்தாளே ....

http://www.youtube.com/watch?v=wBNL5C8USLo



pen kiliye lyrics-sandhitha velai tamil song lyrics / பெண் கிளியே பெண் கிளியே

Movie Name:Santhitha velai
Song Name:Pen kiliye pen kiliye
Singers:Unni krishnan,Sujatha
Music Director:Deva
Lyricist:Vairamuthu
Cast:Karthik,Kousalya,Roja
Year of release:2000

Lyrics:-

Pen kiliye pen kiliye paadugiren oru paattu
EN paattu vari pidithirunthaal
Un siragaal pachaik kodi kaattu

Pen kiliye ...

Vaai mozhi ellaame vaaimai sollaathu
Ulmanam pesaamal unmaith thondraathu
Vaai mozhi ellaame vaaimai sollaathu
Pen kili poi sonnaal aan kili thoongaathu

Aan kiliye aan kiliye paadugiren oru paattu
Paattu vari purinthu kondaal
Un pallaviyai nee maatru

Pen kangale naadagam aaguma
Pen nenjame oodagam aaguma
Yaar solliyum pen manam ketkuma
Kaith thattinaal mottugal pookkuma
Vidai ketten kelvi thanthaai
Idhu pudhiraana pudhir allava
Kelvikkulle badhil thedu
Adhu suvaiyaana suvai allava
Ullathin vannam ennath theriyavillai
Udaithuch sollum varaip purivathillai
Moodaatha poovukkul endrum thaen illai

Pen kiliye pen kiliye paadugiren oru paattu
En paattu vari pidithirunthaal
Un siragaal pachaik kodi kaattu

En nenjile aayiram osaigal
Un kaadhile ketkave illaya
Nee azzhip pol alaigalai yevinaal
Naan karaiyaip pol mounamaai mevinen
Nenjil paasam kannil vesham
Ithu pen poosum arithaarama
Unmaik kaana vanmai illai
Ungal vizhi en mel pazhi poduma
Nilavaip pirivatharku valimai undu
Un nenjaip purivatharku valaima illai
Kaanal neer thedaathe ange neer illai

Aan kiliye aankiliye paadugiren oru paattu
Paattu vari purinthu kondaal
Un pallaviyai nee maatru

Pen kiliye pen kiliye paadugiren oru paattu
En paattu vari pidithirunthaal
Un siragaal pachak kodi kaattu

பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு

பெண் கிளியே ...

வாய் மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
உள்மனம் பேசாமல் உண்மைத் தோன்றாது
வாய்மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
பெண் கிளி பொய் சொன்னால் ஆண் கிளி தூங்காது

ஆண் கிளியே ஆண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
பாட்டு வரி புரிந்து கொண்டால்
உன் பல்லவியை நீ மாற்று

பெண் கண்களே நாடகம் ஆடுமா
பெண் நெஞ்சமே ஊடகம் ஆகுமா
யார் சொல்லியும் பெண் மனம் கேட்குமா
கைத் தட்டினால் மொட்டுக்கள் பூக்குமா
விடை கேட்டேன் கேள்வி தந்தாய்
இது புதிரான புதிர் அல்லவா
கேள்விக்குள்ளே பதில் தேடு
அது சுவையான சுவை அல்லவா
உள்ளத்தின் வண்ணம் என்னத் தெரியவில்லை
உடைத்துச் சொல்லும் வரைப் புரிவதில்லை
மூடாத பூவுக்குள் என்றும் தேன் இல்லை

பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு

என் நெஞ்சிலே ஆயிரம் ஓசைகள்
உன் காதிலே கேட்கவே இல்லையா
நீ ஆழிப் போல் அலைகளை ஏவினால்
நான் கரையைப் போல் மௌனமாய் மேவினேன்
நெஞ்சில் பாசம் கண்ணில் வேஷம்
இது பெண் பூசும் அறிதாரமா
உண்மைக் காண வன்மை இல்லை
உங்கள் விழி என்மேல் பழி போடுமா
நிலவைப் பிரிவதற்கு வலிமை உண்டு
உன் நெஞ்சைப் புரிவதற்கு வலிமை இல்லை
கானல் நீர் தேடாதே அங்கே நீர் இல்லை

ஆண் கிளியே ஆண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
பாட்டு வரி புரிந்து கொண்டால்
உன் பல்லவியை நீ மாற்று

பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு



http://www.youtube.com/watch?v=DMPMKj4vPX8



vaan megangale lyrics-pudhiya vaarpugal tamil song lyrics / வான் மேகங்களே

Movie Name:Pudhiya vaarpugal
Song Name:Vaan megangale
Singer:Malaysia Vasudevan,S.Janaki
Music Director:Ilaiyaraja
Lyricist:Kannadasan
Cast:Bhagyaraj,Rati agnihotri
Year of release:1979

Lyrics:-

Vaan megangale vaazhthugal paadungal
Naan indru kandukonden raamanai
Vaan megangale
Vaan megangale vaazhthugal paadungal
Naan indru kandukonden seedhaiyai
Vaan megangale

Paalile pazham vizhunthu thaenile nanainthathamma (2)
Poovile maalai katti sooduven kanna
Koo kukkukoo
Kuyil paadi vaazhthum neram kanden

Vaan megangale ....

Thendral aasai kondu thogaiyaai kalainthathamma (2)
Devadhai vannam konda poovai nee kanne
Vaa ammammaa
Nenjil deepam yetrum dhegam kanden

Vaan megangale ....

Palliyil paadam solli ketka naan aasai konden
Paavaiyin kovil mani osaiyai nee kanne
Thaa thannanna
Sangin osai ketkum neram endro

Vaan megangale ....

வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
வான் மேகங்களே

வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்
நான் இன்றுக் கண்டு கொண்டேன் சீதையை
வான மேகங்களே

பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்ததம்மா (2)
பூவிலே மாலைக் கட்டி சூடுவேன் கண்ணா
கூ குக்குகூ
குயில் பாடி வாழ்த்தும்  நேரம் கண்டேன்

வான் மேகங்களே ...

தென்றல் ஆசைக் கொண்டு தொகையை கலைந்ததம்மா (2)
தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே
வா அம்மம்மா
நெஞ்சில் தீபம் ஏற்றும் தேகம் கண்டேன்

வான் மேகங்களே ....

பள்ளியில் பாடம் சொல்லி கேட்க நான் ஆசைக் கொண்டேன்
பாவையின் கோவில் மணி ஓசையை நீ கண்ணே
தா தன்னன்னா
சங்கின் ஓசை கேட்கும் நேரம் என்றோ ?

வான் மேகங்களே ....

http://www.youtube.com/watch?v=Q8MPSbmZjy4



varutha padatha valbar sangam lyrics-varutha padatha valibar sangam tamil song lyrics / ஊற காக்க உண்டான சங்கம்

Movie Name:Varutha padatha valibar sangam
Song Name:Oora kaakka
Singers:Sivakarthikeyan
Music Director:D.Imman
Lyricist:Yuga bahrathi
Cast:Sivakarthikeyan,Divya
Year of release:2013

Lyrics:-

Sillaavooru dhingukallu
Sinnaalam patti pakkam sollu
Namma silukkuvar patti singam
Sembu kalakkaatha thangam
Adhu vachiruppatho varuthapadaatha valibar sangam

Anne anbukku annai theresa
Arivukku abdul kalaam
Adakkathula nelson madela
Namma bose pandi anne kudutha ainooru rubaai
Anju latchama nenachukittu
Namma alli nagarathu adiya
Konjam adichu thaan kaattuvoma

Oora kaakka undaana sangam
Uyirai kudikka uruvaana sangam
Illa ithu illa
Naanga ellaarum vilaiyaattu pulla

Varuthapadaatha valibar sangam
Ivanga varuthapadatha valibar sangam

Needhi nermai kaakkindra sangam
Nenja nimirthi poraadum sangam
Illai ithu illa
Ithukku mela ennaththa solla

Varuthapadaatha valibar sangam
Ivanga varuthapdatha valibar sangam

Aazham theriyaama kaala vachu
Adiyum sarukkiruvom
Hey ooru naduvula banner vachi
Pattaya kilappiruvom

Pora vazhip povom
Perum pulliya pola than vaazhvom
Kanda edathula vethala poduvom
Kaasu panathukku sandaiya poduvom
Sanda nadakkaiyil kattaya poduvom
Santhadi saakula aattaya poduvom
Naanga

Adukku mozhiyil vasanam pesuvom
Azhagu ponnunna kavitha solluvom
Inainja kaadhala pirikka ennuvom
Engala naangale pugazhnthu thalluvom
Naanga ..
Sema vaalu seiyum settaiku kidayaathu rule-lu
Sontha veettukke adangaatha aalu

Varuthapadatha valibar sangam ingaaru
Ivanga varuthapadatha valbar sangam
Kondruven paathukko

Modhum puliyaaga lanthadippom
Muraicha payanthuruvom
Neram theriyaama thoongiruvom
Neraiya pesiruvom (2)

Veyil adikkuthu mazhai adikkuthu
Alai adikkuthu puyal adikkuthu
Para parakkuthu kuru kurukkuthu
Paruvap ponnunna shock adikkuthu
Yenga ...

Kodi parakkuthu vedi vedikkuthu
Kulunga kulunga kili sirikkuthu
Parai adikkuthu thavul adikkuthu
Mansukkullaara mani adikkuthu
Naanga..
Sema vaalu seiyum settaiku kidaiyaathu rule-lu

Varutha padatha valibar sangam adiye aaththa
Varutha padatha valibar sangam

Inime ellam appadith than

சில்லாவூரு  திண்டுகல்லு
சின்னாளம் பட்டி  பக்கம்  சொல்லு
நம்ம  சிலுக்குவார்  பட்டி  சிங்கம்
செம்பு  கலக்காத தங்கம்
அது  வச்சிருப்பதோ வருத்தப்படாத வாலிபர் சங்கம்

அண்ணே  அன்புக்கு  அன்னை தெரசா
அறிவுக்கு  அப்துல் காலம்
அடக்கதுல நெல்சன் மண்டேலா
நம்ம  போஸ்பாண்டி அண்ணே குடுத்த  ஐந்நூறுரூபாய
அஞ்சு  லட்சமா  நினைச்சுகிட்டு
நம்ம  அல்லி நகரத்து  அடிய
கொஞ்சம்  அடிச்சு  தான் காட்டுவோமா

ஊற  காக்க  உண்டான  சங்கம்
உயிரை  குடுக்க  உருவான  சங்கம்
இல்ல  இது  இல்ல
நாங்க  எல்லாரும்  விளையாட்டு  புள்ள

வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்
இவங்க  வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்

நீதி  நேர்மை  காக்கின்ற  சங்கம்
நெஞ்ச  நிமிர்த்தி  போராடும்  சங்கம்
இல்ல  இது  இல்ல
இதுக்கு  மேல என்னத்த  சொல்ல

வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்
இவங்க  வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்

ஆழம்  தெரியாம  கால  வச்சு
அடியும்  சருக்கிருவோம்
ஹேய் ஊரு  நடுவால  பேனர் வச்சி
பட்டய  கிளப்பிருவோம்

போற  வழி  போவோம்
பெரும்  புள்ளிய  போல  தான்  வாழ்வோம்

கண்ட  எடத்துல  வெத்தல போடுவோம்
காசு  பணத்துக்கு  சண்டைய  போடுவோம்
சண்ட  நடக்கையில்  கட்டய போடுவோம்
சந்தடி  சாக்குல  ஆட்டய போடுவோம்
நாங்க..

அடுக்கு  மொழியில்  வசனம்  பேசுவோம்
அழகு  பொண்ணுனா கவித சொல்லுவோம்
இணைஞ்ச காதல  பிரிக்க  எண்ணுவோம்
எங்கள  நாங்களே  புகழ்ந்து  தள்ளுவோம்
நாங்க..
செம  வாலு.. செய்யும்  சேட்டைக்கு  கிடையாது  ரூலு
சொந்த  வீட்டுக்கே  அடங்காத  ஆளு

வருத்தப்படாத  வாலிபர்  சங்கம் .. இங்காரு
இவங்க  வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்..
கொன்றுவேன் பாத்துக்கோ

மோதும்  புலியாக  லந்தடிபோம்
முரைச்ச  பயன்திருவோம்
நேரம்  தெரியாம  தூங்கிருவோம்
நெறைய  பேசிருவோம் (2)

வெயிலடிக்குது  மழையடிக்குது
அலையடிக்குது  புயலடிக்குது
பற பறக்குது  குறு  குறுக்குது
பருவ  பொண்ணுனா  ஷாக்  அடிக்குது
ஏங்க?

கொடி பறக்குது  வெடி  வெடிக்குது
குலுங்க  குலுங்க  கிளி  சிரிக்குது
பறை  அடிக்குது  தவுல்  அடிக்குது
மனசுக்குள்ளார மணி  அடிக்குது
நாங்க..
செம  வாலு.. செய்யும்  சேட்டைக்கு  கிடையாது  ரூலு
சொந்த  வீட்டுக்கே  அடங்காத  ஆளு

வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்.. அடியே  ஆத்தா
வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்

இனிமே  எல்லாம்  அப்டித்தான்..

http://www.youtube.com/watch?v=HuSxftQY43I



hey hey keechu kiliye lyrics-mugavari tamil song lyrics / ஹே ஹே ஹே கீச்சு கிளியே

Movie Name:Mugavari
Song Name:Hey hey hey keechu kiliye
Singer:Hariharan
Music Director:Deva
Lyricist:Vairamuthu
Cast:Ajith,Jyothika
Year of release:2000

Lyrics:-

Hey hey keechu kiliye en kaadhil thithithaai
Isaiyaale enathu pudhiya naalai nee indru thiranthaai

Hey hey hey keechu kiliye en kaadhil thithithaai
Isaiyaale enathu pudhiya naalai nee indru thiranthaai

Karuvondru pirappathu pathu maadhathil
Iruthayam thudippathu yezhu maadhathil
Adhan uyir sathai isaivathu
Endrum antha naadhathil

Uyirgalin swaasam kaatru
Antha kaatrin swaasam gaanam
Ulage isaiye ..
Endhira vaazhkaiyin idaiye
Nenjil eerathil pusivathum isaiye
Ellaam isaiye ..
Kaadhal vanthaal ada angum isai thaan
Kanneer vanthaal ada angum isai thaan
Thottil kuzhanthai ondru azhuthaal
Adhaith thoonga vaippathum intha isai thaan
Yutha kalathil thookkam tholaithu
Kan vizhippatharkum intha isai thaan

Isaiyodu vanthom isaiyodu vaazhvom
Isaiyodu povom isaiyaavom

Hey hey hey keechu kiliye en kaadhil thithithaai
Isaiyaale enthu pudhiya naalai nee indru thiranthaai

Innisai nindrup ponaal en idhayam nindru pogum
Isaiye uyire ..
Enthan thai mozhi isaiye
En imaigal thudippathum isaiye
Engum isaiye ...
Mounam mounam en nenjai adaikkum
Geetham kettaal adhumeendum thudikkum
Aimpulangal enthan iruppu
Sevi mattum thaan romba sirappu
Nenjil ullathu jeevan pirappu
Aanaal kaadhil ullathu jeevan enakku

Isaiyodu vanthen isaiyodu vaazhven
Isaiyodu poven isayaaven

Hey hey hey keechu kiliye en kaadhil thithithaai
Isaiyaale enathu pudhiya naalai nee indru thiranthaai

Hey hey hey keechu kiliye en kaadhil thithithaai
Isaiyaale enathu pudhiya naalai nee indru thiranthaai

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்
இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்
இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்

கருவொன்று பிறப்பது பத்து மாதத்தில்
இருதயம் துடிப்பது ஏழு மாதத்தில்
அதன் உயிர்சதை இசைவது
என்றும் அந்த நாதத்தில்

உயிர்களின் சுவாசம் காற்று
அந்த காற்றின் சுவாசம் கானம்
உலகே இசையே ...
எந்திர வாழ்கையின் இடையே
நெஞ்சில் ஈரத்தில் புசிவதும் இசையே
எல்லாம் இசையே ...
காதல் வந்தால் அட அங்கும் இசை தான்
கண்ணீர் வந்தால் அட அங்கும் இசை தான்
தொட்டில் குழந்தை ஒன்று அழுதால்
அதை தூங்க வைப்பதும் இந்த இசை தான்
யுத்த தளத்தில் தூக்கம் தொலைத்து
கண் விழிப்பதற்கும் இந்த இசை தான்

இசையோடு வந்தோம் இசையோடு வாழ்வோம்
இசையோடு போவோம் இசையாவோம்

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்
இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்

இன்னிசை நின்று போனால் என் இதயம்
நின்று போகும் இசையே உயிரே
எந்தன் தாய்மொழி இசையே
என் இமைகள் துடிப்பதும் இசையே
எங்கும் இசையே
மௌனம் மௌனம் என் நெஞ்சை அடைக்கும்
கீதம் கேட்டால் அது மீண்டும் துடிக்கும்
ஐம்புலன்கள் எந்தன் இருப்பு
செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு
நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு
ஆனால் காதில் உள்ளது ஜீவன் எனக்கு

இசையோடு வந்தேன் இசையோடு வாழ்வேன்
இசையோடு போவேன் இசையாவேன்

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்
இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்

ஹே ஹே ஹே கீச்சு ...

http://www.youtube.com/watch?v=Qt_FaKUcucY



othaiyile lyrics-endrendrum punnagai tamil song lyrics / ஒத்தையில உலகம் மறந்து போச்சு

Movie Name:Endrendum punnagai
Song Name:Othaiyile
Singer:Tippu,Abhay jodhpurkar
Music Director:Harris Jeyaraj
Lyricist:Kabilan
Cast:Jiiva,Trisha,VInay
Year of release:2013

Lyrics:-

Othaiyila ulagam maranthu pochu
Unnap pathi usuru muzhukka pechu
Nenjai thulaikkuthe uyir valikkuthe
Nammai naame nambi vaazhntha
Natpu meendum varuma

Othaiyile ...

Arattaigal adithome kurattaiyil sirithome
Parattaiyaai thirinthome ippodhu paadhiyil pirinthome
Iravinil nizhalaaga iruvarai izhanthene
Mazhaiyinil azhuthaale kanneerai yaar adhai arivaaro?
Avan tholaivinil thodarkathaiyo?
Ivan vizhigalil vidukathaiyo?
Inimel naane thaniyaal aanen natpu enna nadippo?

Othaiyile ...

Namakkena irunthome dhinasari pirinthome
Thisaigalaai pirinthome
Kalyana katrinil tholainthome
Panithuli malarodu palakkangal silarodu
Natpukku mudivethu endre nee
Sonnathu marakkaadhu

Naanum marakkiren mudiyale
Kanneer vadikkiren karai illaiye
Irunthen unnaal iruppen unnaal
Natpu serkkum oru naal

Othaiyile ....

ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா

ஒத்தையிலே ...

அரட்டைகள் அடித்தோமே குறட்டையில் சிரித்தோமே
பரட்டையாய் திரிந்தோமே இப்போது பாதியில் பிரிந்தோமே
இரவினில் நிழலாக இருவரை இழந்தேனே
மழையினில் அழுதாலே கண்ணீரை யார் அதை அறிவாரோ?
அவன் தொலைவினில் தொடர்கதையோ ?
இவன் விழிகளில் விடுகதையோ ?
இனிமேல் நானே தனியாள் ஆனேன் நட்பு என்ன நடிப்போ ?

ஒத்தையிலே ...

நமக்கென இருந்தோமே தினசை பிரிந்தோமே
திசைகளை பிரிந்தோமே
கல்யாண காற்றினில் தொலைந்தோமே
பனித்துளி மலரோடு பழக்கங்கள் சிலரோடு
நட்புக்கு முடிவேது என்றே நீ சொன்னது மறக்காது
நானும் மறக்கிறேன் முடியலே
கண்ணீர் மறக்கிறேன் முடியலே
கண்ணீர் வடிக்கிறேன் கரை இல்லையே
இருந்தேன் உன்னால் இருப்பேன் உன்னால்
நட்பு சேர்க்கும் ஒரு நாள்

ஒத்தையிலே ....

 http://www.youtube.com/watch?v=ZQpvb_EQorI



kuyila pudichu lyrics-chinna thambi tamil song lyrics / குயில புடிச்சி கூண்டில் அடச்சி

Movie Name:Chinna thambi
Song Name:Kuyila pudichu
Singers:S.P.Balasubramanium
Music Director:Ilaiyaraja
Lyrcist:Vaali
Cast:Prabhu,Kushboo
Year of release:1991
 
Lyrics:-
 
Kuyila pudichi koondil adachi koovach sollugira ulagam
Mayila pudichi kaala odachi aadach sollugira ulagam

Kuyila pudichi koondil adachi koovach sollugira ulagam
Mayila pudichi kaala odachi aadach sollugira ulagam
Adhu eppadi paadum aiya
Adhu eppadi aadum aiya
Oh oh oh ...

Kuyila pudichi koondil adachi koovach sollugira ulagam
Mayila pudichi kaala odachi aadach sollugira ulagam

Aanpillai mudipodum ponthaali kayiru
Ennaannu theriyaathu enakku
Aathalai naan kettu arinjene piragu
Aanaalum payan enna adhukku
Verenna ellaame naan senja paavam
Yaar mele enakkenna kobam
Olai kudisaiyila intha yezha poranthathukku
Vanthathu thandanaiya
Ithu dheivathin ninthanaiya
Ithai yaarodu solla

Kuyila pudichi koondil adachi ....

Ellorkkum thalaimela ezhuththonnu undu
Ennaannu yaar sollak koodum
Kanneerk kudamkondu vadichaalum kooda
Ennaalum azhiyaamal vaazhum
Yaaraarkku edhuvendru vidhi podum paadhai
Ponaalum vanthaalum adhu thaan
Yezhai en vaasalukku vanthathu poongkuruvi
Kozhai endre irunthen ponathu kai nazhuvi
Idhai yaarodu solla

Kuyila pudichi koondil adachi ....

குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்

குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமைய்யா
அது எப்படி ஆடுமைய்யா
ஓ ஓ ஓ ....

குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்

ஆண்பிள்ளை முடிபோடும் பொன்தாலி கயிறு
என்னான்னு தெரியாது எனக்கு
ஆத்தாலை நான் கேட்டு அறிஞ்சேனே பிறகு
ஆனாலும் பயனென்ன அதுக்கு
வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம்
யார் மேலே எனக்கென்ன கோபம்
ஓலை குடிசையில இந்த ஏழ பொறந்ததுக்கு
வந்தது தண்டனையா
இது தெய்வத்தின் நிந்தனையா
இதை யாரோடு சொல்ல

குயில புடிச்சி கூண்டில் அடச்சி ....

எல்லார்க்கும் தலைமேல எழுத்தொண்ணு உண்டு
என்னான்னு யார் சொல்லக் கூடும்
கண்ணீரக் குடம் கொண்டு வடிச்சாலும் கூட
எந்நாளும் அழியாமல் வாழும்
யாரார்க்கு எதுவென்று விதி போடும் பாதை
போனாலும் வந்தாலும் அது தான்
ஏழை என் வாசலுக்கு வந்தது பூங்குருவி
கோழை என்றே இருந்தேன் போனது கை நழுவி
இதை யாரோடு சொல்ல

குயில புடிச்சி கூண்டில் அடச்சி ....
 
 http://www.youtube.com/watch?v=yXwYcokbeP4
 
 

agalaathe agalaadhe lyrics-settai tamil song lyrics / அகலாதே அகலாதே

Movie Name:Settai
Song Name:Agalaathe agalaathe
Singers:Vijay Prakash,Megha
Music Director:Thaman.S
Lyricist:Madhan Karky
Cast:Aarya,Premji,Santhanam,Hansika,Anjali
Year of release:2013

Lyrics:-
 
Agalaadhe agalaadhe azhage nee agalaadhe
En kannai vittup penne agalaadhe
Nee illai endraal vaazhve nigalaadhe
Agalaadhe agalaadhe azhage nee agalaadhe

Dhinam dhinam vaanam sendru
Parakkum vimaanam ondru
Unnai unnai modhum ippodhu
Sudach suda mutham endru
Kisu kisu seidhi ondru
Adikkadi vanthaal theppethu

Agalaadhe agalaadhe ....

Yeraalamaaga kaadhal thaaralamaaga naanum
Verenna ketkiraai
Naavil vizhum thenai nee thinna thaane thinarugiraai

Hey adhiradi poove nee varum varai
Vaazhvinil rusi kaaramyethum illai
Thathalikkiren nee thelikkiraai
Nee ingu tharuvathu perunthollai

Dhinam dhinam vaanam sendru
Parakkum vimaanam ondru
Unnai unnai modhum ippothu
Sudach suda mutham endru
Kisu kisu seithi ondru
Adikkadi vanthaal thappethu

Kaatrile oru panjaip pola
Kaadhalil en nenjam veezha
Megamaai naan aanen unnaale

Agalaathe agalaathe azhage nee agalaathe
En kannai vittup penne agalaathe
Nee illai endraal vaazhve nigazhaathe

அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே
என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே
நீ இல்லை என்றால் வாழ்வே நிகழாதே
அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே

தினம் தினம் வானம் சென்று
பறக்கும் விமானம் ஒன்று
உன்னை உன்னை மோதும் இப்போது
சுடச்சுட முத்தம் என்று
கிசு கிசு செய்தி ஒன்று
அடிக்கடி வந்தால் தப்பேது

அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே
என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே
நீ இல்லை என்றால் வாழ்வே நிகழாதே

ஏராளமாக காதல் தாராளமாக நானும்
வேறேன்ன கேட்கிறாய் ஓ ஓ ஓ
நாவில் வீழும் தேனை நீ தின்ன தானே திணறுகிறாய்

ஹே அதிரடி பூவே நீ வரும் வரை
வாழ்வினில் ருசிகரம் ஏதும் இல்லை
தத்தளிக்கிறேன் தீ தெளிக்கிறாய்
நீ இங்கு தருவது பெருந்தொல்லை

தினம் தினம் வானம் சென்று
பறக்கும் விமானம் ஒன்று
உன்னை உன்னை மோதும் இப்போது
சுடச்சுட முத்தம் என்று
கிசு கிசு செய்தி ஒன்று
அடிக்கடி வந்தால் தப்பேது

காற்றிலே ஒரு பஞ்சை போல
காதலில் என் நெஞ்சம் வீழ
மேகமாய் நான் ஆனேன் உன்னாலே

அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே
என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே
நீ இல்லை என்றால் வாழ்வே நிகழாதே

http://www.youtube.com/watch?v=v0AmuA9YssU