Labels

un tholil saaya lyrics-chennaiyil oru naal tamil song lyrics / உன் தோளில் சாய

Movie Name:Chennaiyil oru naal
Song Name:Un tholil saaya
Singers:Nivas,Ganga
Music Director:Mijo joseph
Year of release:2013



Lyrics:-

Un tholil saaya vendum
Angeye thoonga vendum
Enakkaaga paadu penne oru thaalaattu

En nenjil vanthaaye vanthaaye mazhaiyaaga
Naan engo sendrene sendrene alaiyaaga
Kannoram nindraaye nindraaye silaiyaaga
Enai engo nee thookkip ponaaye malaiyaaga

Unakkena thaane thudikuthu
Penne idhayam idhayam
Un peyar solli kudhikkuthu
Penne idhayam idhayam (2)

Charanam - 1

Oru vizhi adhu nilavaip pole
Maruvizhi adhu kadhiraip pole
Iru vizhi adhu idhayam mele
Vaalai veesiduthe

Oru nodi adhu paniyin mele
Maru nodi adhu analin mele
Idhu enna kaadhale
Kaalam maariduthe

Unmaiyil naan kaagitham
Vannamaai nee maatrinaai
Penmaiye thindaaduthe kondaaduthe

Unakkena thaane ...

Charanam -2

Karung koonthal kammal pola
Ida valam ena oonjal aada
Unakkulle vanthu ennaith theda
Ullam virumbiduthe

Imai azhagathu nellaip pola
Idai azhagathu ilaip pola
Mei azhagathu thollaip pola
Kangal thirumbiduthe

Ennamo nee seigiraai
Un kangalaal nee kolgiraai
Penmaiye thindaaduthe kondaaduthe

Unakkena thaane ...

Un tholil saaya ...

உன் தோளில் சாய வேண்டும்
அங்கேயே தூங்க வேண்டும்
எனக்காக பாடு பெண்ணே ஒரு தாலாட்டு

உன் தோளில் சாய வேண்டும்
அங்கேயே தூங்க வேண்டும்
எனக்காக பாடு பெண்ணே ஒரு தாலாட்டு

என் நெஞ்சில் வந்தாயே வந்தாயே மழையாக
நான் எங்கோ சென்றேனே சென்றேனே அலையாக
கண்ணோரம் நின்றாயே நின்றாயே சிலையாக
எனை எங்கோ நீ தூக்கி போனாயே மலையாக

உனக்கென தானே துடிக்குது
பெண்ணே இதயம் இதயம்
உன் பெயர் சொல்லி குதிக்குது
பெண்ணே இதயம் இதயம் (

ஒரு விழி அது நிலவைப் போலே
மறுவிழி அது கதிரைப் போலே
இரு விழி அது இதயம் மேலே
வாளை வீசிடுதே

ஒரு நொடி அது பனியின் மேலே
மறு நொடி அனலின் மேலே
இது என்ன இது காதலே
காலம் மாறிடுதே

உண்மையில் நான் காகிதம்
வண்ணமாய் நீ மாற்றினாய்
பெண்மையே திண்டாடுதே கொண்டாடுதே

உனக்கென தானே ...

கருங்கூந்தால் கம்மல் போல
இட வலம் என ஊஞ்சல் ஆட
உனக்குள்ளே வந்து என்னைத் தேட
உள்ளம் விரும்பிடுதே

இமை அழகது நெல்லைப் போல
இடை அழகது இலைப் போல
மெய் அழகது தொல்லை போல
கண்கள் திரும்பிடுதே

என்னமோ நீ செய்கிறாய்
உன் கண்களால் நீ கொல்கிறாய்
பெண்மையே திண்டாடுதே கொண்டாடுதே

உனக்கென தானே ...

உன் தோளில் சாய ...

 https://www.youtube.com/watch?v=5c6GakbTYlI



endhan kannil lyrics-guru tamil song lyrics / எந்தன் கண்ணில்

Movie Name:Guru
Song Name:Enthan kannil
Singers:S.Janaki
Music Director:Ilaiyaraja
Lyricist:Kannadasan
Cast:Kamalhassan,Sridevi
Year of release:1980



Lyrics:-

Endhan kannil yezhulagangal
Vaaraai kanna vaa
Endhan kannil yezhulagangal
Vaaraai kanna vaa
Naan indru naanum illai
En nenjil naanam illai
Pabapa ..

Endhan kannil yezhulagangal
Vaaraai kanna vaa

Roja malarnthathu thuvandathu
Raajaavin kaigal yenthattume (2)
Inge ival sorgam edhu
Inbam tharum sangam edhu
Nee

Endhan kannil ....

Vaanam vizhunthathu valainthathu
Namakkenna paavam pogattume (2)
Sugame enna sugamo idhu
Thallaadum ragamo idhu
Vaa

Enthan kannil ....

எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்
வாராய் கண்ணா வா
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்
வாராய் கண்ணா வா
நான் இன்று நானும் இல்லை
என் நெஞ்சில் நானும் இல்லை
பபபா...

எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்
வாராய் கண்ணா வா

ரோஜா மலர்ந்தது துவண்டது
ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே (2)
இங்கே இவள் சொர்க்கம் எது
இன்பம் தரும் சங்கம் எது
நீ

எந்தன் கண்ணில் ....

வானம் விழுந்தது வளைந்தது
நமக்கென பாவம் போகட்டுமே (2)
சுகமே என்ன சுகமோ இது
தள்ளாடும் ரகமோ இது
வா

எந்தன் கண்ணில் ...

https://www.youtube.com/watch?v=i_leU9M6PmQ



kaalangathale lyrics-vengai tamil song lyrics / காலங்காத்தால

Movie Name:Vengai
Song Name:Kaalangaathala
Singer:Karthik
Music Director:Devi Sri Prasad
Lyricist:Viveka
Cast:Dhanush,Tamanna
Year of release:2011



Lyrics:-

Kaalangaathala maranjirukkum vennila pola
Ennap paathaale olinjukkuriye penne

Pozhuthu saanjaale thala kuniyum thaamarap pola
Ennap paathaale vekkappaduriye penne
Unnai nan paarthen
naan rasithen naan thindaadinen
Unnai naan thodarnthen
naan unarnthen naan kaadhal konden
En vaazhkaiyin vaasale neeye thaanadi ohoho

Kaalangaathaala ....

Udhattai suzhithu sirikkumpozhuthu
Uyiril vedi vaikkiraai
Ovvoru vaarthai mudiyum pozhuthum
Edharku podi vaikkiraai
Kolu bommai pol irukkiraai
Nee kodi mullai pol nadakkiraai
Adikkadi nagam kadikkiraai
Ennai mayakki maayam seidhaai
Naan raathiri paarthidum vaanavil nee ho

Kaalangaathala ...

Pazhasai maraikka ninaikkum
Unakku nadikka varavillaiye
Uruvam maranthu puruvam viriya
Siruvan naan illaiye
Edharku nee ennaith thavirkkiraai
En edhirile mugam sivakkiraai
Agam ellaam poi poosiye
Ennai arugil serkka maruthaai
En aaviyai thaakkidum theeye neeyadi ho oh

Kaalangaathala ...

காலங்காத்தால மறஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னப் பாத்தாலே ஒளிஞ்சுக்குறியே பெண்ணே
ஹும்ம் ஹும்ம் ஹும்ம்

காலங்காத்தால மறஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னப் பாத்தாலே ஒளிஞ்சுக்குறியே பெண்ணே
பொழுது சாஞ்சாலே தல குனியும் தாமரப்போல
என்னப் பாத்தாலே வெக்கப்படுறியே பெண்ணே
உன்னை நான் பார்த்தேன்
நான் ரசித்தேன் நான் திண்டாடினேன்
உன்னை நான் தொடர்ந்தேன்
நான் உணர்ந்தேன் நான் காதல் கொண்டேன்
என் வாழ்கையின் வாசலே நீயேதானடி ஹொஹோஹோ

காலங்காத்தால மறஞ்சிருக்கும் ....

உதட்டை சுழித்து சிரிக்கும்பொழுது
உயிரில் வெடி வைக்கிறாய்
ஒவ்வொரு வார்த்தை முடியும்பொழுதும்
எதற்கு பொடி வைக்கிறாய்
கொலு பொம்மை போல் இருக்கிறாய்
நீ கொடி முல்லை போல் நடக்கிறாய்
அடிக்கடி நகம் கடிக்கிறாய்
என்னை மயக்கி மாயம் செய்தாய்
நான் ராத்திரி பார்த்திடும் வானவில் நீ ஹோ ஓ

காலங்காத்தால மறஞ்சிருக்கும் ....

பழசை மறைக்க நெனைக்கும்
உனக்கு நடிக்க வரவில்லையே
உருவம் மறந்து புருவம் விரிய
சிறுவன் நானில்லையே
எதற்கு நீ என்னை தவிர்கிறாய்
என் எதிரிலே முகம் சிவக்கிறாய்
அகமெல்லாம் பொய் பூசியே
என்னை அருகில் சேர்க்க மறுத்தாய்
என் ஆவியை தாக்கிடும் தீயே நீயடி ஹோ ஓ

காலங்காத்தால மறஞ்சிருக்கும் ....

https://www.youtube.com/watch?v=3TmSJWhnIEI





medhuvaaga thaan lyrics-kochadaiiyaan tamil song lyrics / மெதுவாகத் தான்

Movie Name:Kochadaiyaan
Song Name:Medhuvaaga thaan
Singers:S.P.Balasubramanium,Sadhana sargam
Music Director:A.R.Rahman
Lyricist:Vali
Cast:Rajinikanth,Deepika
Year of release:2014

Lyrics:-

Medhuvaaga thaan medhuvaaga thaan
Enai eerkiraai pazhi vaangavaa
Medhuvaagath thaan medhuvaagath thaan
Enai eerkiraai pazhi vaangavaa
Mayilaasana maruvidhazh naane
Mazhai megamaai irangi vanthene
Un vizhi orathil vizhunthu vittene naan

Medhuvaaga thaan medhuvaagath thaan
Enai eerkiraai enai vaangavaa
Annam mada vannam
Azhagaich sindhum aravindham
Manjam ezhuthaa manmadham ival azhagu
Ettum thisai ettum
Dhinam kattum parivattam
Innum solla mozhi illaye

Kodi vendumaa kudai vendumaa
Un madi pola yaavum sugam nalgumaa

Padai vendumaa pagai venduma
Unaip pol veezhtha aal yedhu
Enai vella yaarum illai
Unaiyindri thisaigal vellum isaiye

Aadhi andham aagi vantha jodhi indha azhagan
Manam kani vaiyam konda
Yedhan thotta malar thaan ivalallaaa (2)

Rana.. rana ..
Ennaik konju rana
Unnai minja aana
Azhagu pogum veena
Neram pokka venaa

Thottu vantha mullai vittu vaithathillai
Konjum anbuth thollai
Kaattum inba ellai

Jaare jaare ...

Aadhi andham...

Annam mada vannam
Azhagaich sindhum aravindham
Manjam ezhutha manmadham ival azhagu
Ettum thisai ettum
Dhinam kattum parivattam
Innum solla mozhi illaiye

Kodi vendumaa kudai vendumaa
Un madi pola yaavum sugam nalgumaa

Padai vendumaa pagai venduma
Unaip pol veezhtha aal yedhu

Medhuvaaga thaan medhuvaaga thaan
Enai eerkiraai pazhi vaangavaa

Medhuvaaga thaan medhuvaagath thaan
Enai eerkiraai enai vaangavaa

மெதுவாகத் தான் மெதுவாகத் தான்
எனை ஈராக்கிறாய் பழி வாங்கவா
மெதுவாகத் தான் மெதுவாகத் தான்
எனை ஈர்க்கிறாய் பழி வாங்கவா
மயிலாசன மருவிதழ் நானே
மழை மேகமாய் இறங்கி வந்தேனே
உன் விழி ஓரத்தில் விழுந்து விட்டேனே நான்

மெதுவாகத் தான் மெதுவாகத் தான்
எனை ஈர்க்கிறாய் எனை வாங்கவா
அன்னம் மட வண்ணம்
அழகைச் சிந்தும் அரவிந்தம்
மஞ்சம் எழுதா மன்மதம் இவள் அழகு
எட்டும் திசை எட்டும்
தினம் கட்டும் பரிவட்டம்
இன்னும் சொல்ல மொழி இல்லையே

கோடி வேண்டுமா குடை வேண்டுமா
உன் மடி போல யாவும் சுகம் நல்குமா

படை வேண்டுமா பகை வேண்டுமா
உனைப் போல் வீழ்த்த ஆள் ஏது
எனை வெல்ல யாரும் இல்லை
உனையின்றி திசைகள் வெல்லும் இசையே

ஆதி அந்தம் ஆகி வந்த ஜோதி இந்த அழகன்
மனம் கனி வையம் கொண்ட
ஏதன் தோட்ட மலர் தான் இவளல்லவா (2)

ராணா.. ராணா..
என்னைக் கொஞ்சு ராணா
உன்னை மிஞ்ச ஆணா
அழகு போகும் வீணா
நேரம் போக்க வேணா

தொட்டு வந்த முல்லை விட்டு வைத்ததில்லை
கொஞ்சும் அன்புத் தொல்லை
காட்டும் இன்ப எல்லை

ஜாரே ஜாரே ...

ஆதி அந்தம் ....

அன்னம் மட வண்ணம்
அழகைச் சிந்தும் அரவிந்தம்
மஞ்சம் எழுதா மன்மதம் இவள் அழகு
எட்டும் திசை எட்டும்
தினம் கட்டும் பரிவட்டம்
இன்னும் சொல்ல மொழி இல்லையே

கோடி வேண்டுமா குடை வேண்டுமா
உன் மடி போல யாவும் சுகம் நல்குமா

படை வேண்டுமா பகை வேண்டுமா
உனைப் போல் வீழ்த்த ஆள் ஏது

மெதுவாகத் தான் மெதுவாகத் தான்
எனை ஈராக்கிறாய் பழி வாங்கவா

மெதுவாகத் தான் மெதுவாகத் தான்
எனை ஈர்க்கிறாய் எனை வாங்கவா

https://www.youtube.com/watch?v=fifFQZoBbx4




idicha pacharisi lyrics-uthamaputhiran tamil song lyrics / இடிச்ச பச்சரிசி

Movie Name:Uthamaputhiran
Song Name:Idicha pacharisi
Singers:Ranjith,Sangeetha,Vinaya
Music Director:Vijay Antony
Lyricist:Annamalai
Cast:Dhanush,Genelia
Year of release:2010

 

Lyrics:-

Kalyaana thedhi vanthu kannodu ottik kichu
Pen nenjil aanantha koothaachu
Paarungadi ponna paarungadi
Vetkathil ava kannam sivanthiruchu

Ye idicha pacharisi pudicha maavilakku
Araicha sandhanamum manakka
Madhura malliga poo sirikkum sevvanthip poo
Sevantha kungumap poo mayakka

Thai maasam vanthuduchu kaala neram senthuduchu
Jodi onna aayiduchu melach satham kettuduchu
Megam karuthuruchu maari mazhai penjuduchu
Mannil manam yeriduchu manjal niram koodiduchu

Thanthana thanthana thanthana thanthana
Thanthaanannaanannaane (2)

Ye idicha pacharisi ....

Ye nenachak kanavu onnu nejama nadanthuduchu
Unnoda naan serurathu palichaachu

Vidhaicha vidhaiyum ingu chediyaa mulaichiduchu
Poovum illa kaayum illa kaniyaachu

Kalyaanath thedhi vanthu kannodu ottikkichu
En nenjil aananthak koothaachu

Ye kandaangi selaik katti en kaiya nee pudichu
Naam serum naalu ingu vanthaachu

Thanthana thanthana ...

Idicha pacharisi ...

Ye thaangum marakkilaiyaa pora vazhi nee thunaiyaa
Kooda vara enna kora adhu podhum

Ye aalamarathu mela koovum oru kuyilaa
Veettukkulla koodu kattu adhu podhum

Ennoda nee sirichaa kanneer nee thudaicha
Verethum venaame adhu podhum

Veedu thirumbaiyile vaasal thorakkaiyile
Manjal mugam siricha adhu podhum

Thanthana thanthana ...

Ye idicha pacharisi ....

கல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு
பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு
பாருங்கடி பொண்ண பாருங்கடி
வெட்கத்தில் அவ கன்னம் சிவந்திருச்சு

ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு
அரைச்ச சந்தனமும் மணக்க
மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க

தை மாசம் வந்துடுச்சு கால நேரம் சேந்துடுச்சு
ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு மேளச்சத்தம் கேட்டுடுச்சு
மேகம் கருத்துருச்சு மாரி மழை பெஞ்சுடுச்சு
மண்ணில் மணம் ஏறிடுச்சு மஞ்சள் நிறம் கூடிடுச்சு

தந்தண தந்தண தந்தண தந்தண தந்தானன்னானன்னானே
தந்தண தந்தண தந்தண தந்தண தந்தானன்னானன்னானே

ஏ இடிச்ச பச்சரிசி ....

ஏ நெனச்சக் கனவு ஒண்ணு நெஜமா நடந்துடுச்சு
உன்னோட நான் சேருறது பலிச்சாச்சு

விதைச்ச விதையும் இங்கு செடியா முளைச்சிடுச்சு
பூவும் இல்ல காயும் இல்ல கனியாச்சு

கல்யாணத் தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு
என் நெஞ்சில் ஆனந்தக் கூத்தாச்சு

ஏ கண்டாங்கி சேலைக் கட்டி என் கைய நீ புடிச்சு
நாம் சேரும் நாளு இங்கு வந்தாச்சு

தந்தண தந்தண ....

இடிச்ச பச்சரிசி ....

ஏ தாங்கும் மரக்கிளையா போற வழி நீ துணையா
கூட வர என்ன கொறை அது போதும்

ஏ ஆலமரத்து மேல கூவும் ஒருக்குயிலா
வீட்டுக்குள்ள கூடு கட்டு அது போதும்

என்னோட நீ சிரிச்சா கண்ணீர நீ துடைச்சா
வேறேதும் வேணாமே அது போதும்

வீடு திரும்பையிலே வாசல் தொறக்கையிலே
மஞ்சள் முகம் சிரிச்சா அது போதும்

தந்தண தந்தண ....

ஏ இடிச்ச பச்சரிசி ....

தந்தண தந்தண ....

https://www.youtube.com/watch?v=FfG8gUUIj1Y



nenje lyrics-panivizhum nilavu tamil song lyrics /

Movie Name:Panivizhum nilavu
Song Name:Nenje
Singers:Chinmayi,Naresh iyer
Music Director:L.V.Ganesan
Lyricist:Na.Muthukumar
Year of release:2014

 

Lyrics:-

Nenje oh
Nenje oh

Kangal rendum kaadhal solla
Anbe neeyo thallich sella
Kannaik katti kaattilvittaal
Anbe naanum enge sella

Oru murai ennai nee paarthidu
Vizhigale pesum mozhi kettidu
Manadhinaal mella mazhaith thoovidu
Azhaikkirathe

Sila murai kangal poi sollume
Soozhnilai poiyai mei aakkume
Pogaiyena thondrum pani moottame
Vilagume

Nenje oh

Verenna anbe verenna
Unnai naanum ketkiren
Vaazhnthaalum mannil vizhunthaalum
Undhan anbaik ketpen
Idaiveligal kurainthiduma
Ini intha dhooram thaangaathe
Mana thiraigal vilagiduma
Edharkindha mounam podhum
Pogaadhe pogaathe en nenjam pavam
Kanneeril thallaadum en kaadhal odam

Nenje oh

Kangal rendum...

Paakkaathe ennaip paakkaathe
Paarthaal kobam koodum
Pesaathe yedhum pesaathe
Undaal kooda podhum
Nadanthathellaam maranthidalaam
Manadhinil kaayam aaraathe
Idhayathile keeri vittaai
Valikkuthu penne unnaale
Yen unnaip paartheno ennulle kaayam
Un kaadhal mullaaga en nenjil vaazhum

Nenje oh

நெஞ்சே ..ஓ..
நெஞ்சே .. ஓ..

கண்கள் ரெண்டும் காதல் சொல்ல
அன்பே நீயோ தள்ளிச் செல்ல
கண்ணைக்கட்டி காட்டில் விட்டால்
அன்பே நானும் எங்கே செல்ல

ஒரு முறை என்னை நீ பார்த்திடு
விழிகளே பேசும் மொழி கேட்டிடு
மனதினால் மெல்ல மழைத் தூவிடு
அழைக்கிறதே

சில முறை கண்கள் பொய் சொல்லுமே
சூழ்நிலை பொய்யை மெய் ஆக்குமே
புகையென தோன்றும் பனி மூட்டமே
விலகுமே

நெஞ்சே.. ஓ..

வேறென்ன அன்பே வேறென்ன
உன்னை நான் கேட்கிறேன்
வாழ்ந்தாலும் மண்ணில் விழுந்தாலும்
உந்தன் அன்பைக் கேட்பேன்
இடைவெளிகள் குறைந்திடுமா
இனி இந்த தூரம் தாங்காதே
மன திரைகள் விலகிடுமா
எதற்கிந்த மௌனம் போதும்
போகாதே போகாதே என் நெஞ்சம் பாவம்
கண்ணீரில் தள்ளாடும் என் காதல் ஓடம்

நெஞ்சே .. ஓ ..

கண்கள் ரெண்டும் ...

பார்க்காதே என்னைப் பார்க்காதே
பார்த்தல் கோபம் கூடும்
பேசாதே ஏதும் பேசாதே
உண்டால் கூட போதும்
நடந்ததெல்லாம் மறந்திடலாம்
மனதினில் காயம் ஆறாதே
இதயத்திலே கீறி விட்டாய்
வலிக்குது பெண்ணே உன்னாலே
ஏன் உன்னைப் பார்த்தேனோ என்னுள்ளே காயம்
உன் காதல் முள்ளாக என் நெஞ்சில் வாழும்

நெஞ்சே ..ஓ ..


kannukkul pothi vaippen lyrics-thirumanam enum nikkah tamil song lyrics / கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்

Movie Name:Thirumanam enum nikkah
Song Name:Kannukkul pothivaippen
Singers:Vijay prakash,Sadhana sargam
Music Director:M.Ghibran
Lyricist:Parvathy
Cast:Jai,Nazriya
Year of release:2014

Lyrics:-

Kannukkul pothivaipen
En chella kannane vaa
Dhithithathai jadhikkul
Ennodu aada vaa vaa

Adikkadi unaip pidikka naan mandraadida
Ida puram viral madakki nee doo kaattida
En kannane vaada vaa
Vishama kannane vaada vaa

Kannukkul pothivaippen ...

Siru sittigai paasam
Perum kadalaai maara
Manithuli ellaame
Arai nodikkul theera
Mazhai tharaiyaa ullam
Pisipisuppaip pena
Edharkkadi thindaattam
Kadhakadhappai kaana

Nee raadhai idam
Sollaamal sonnaaye
Sengothai manam
Un pechil thanthaaye

Unnaale yosikkiren
Un viralaip pidithu
Nadakkum nimidam yaasikkiren

Kannukkul pothi vaippen ....

Uyir edhaiyo thedum
Manam adhaiye naadum
Thanith thaniye rendum
Oru vazhiyil odum

Edhu edharko poigal
Edhir edhiraai aagum
Vidai kadanthe pogum

Kannaadi munai pol
Ennangal kooraai
Mun illaathathaip pol
Ellaame veraai unnaale poorikkiren
Un sirippu sarathil
Magizha marathil
Poo thaikkiren

Kannukkul pothi vaippen ....

கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்லக் கண்ணனே வா
திதித தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா
அடிக்கடி உனைப் பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி  நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷம கண்ணனே வாடா வா

கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் ....

சிறு சிட்டிகை பாசம்
பெரும் கடலாய் மாற
மணித்துளி எல்லாமே
அரை நொடிக்குள் தீர
மழை தரையா உள்ளம்
பிசுப்பிசுப்பைப் பேண
எதற்கடி திண்டாட்டம்
கதகதப்பைக் காண

நீ ராதை இடம்
சொல்லாமல் சொன்னாயே
செங்கோதை மனம்
உன் பேச்சில் தந்தாயே

உன்னாலே யோசிக்கிறேன்
உன் விரலைப் பிடித்து
நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்

கண்ணுக்குள் பொத்திவைப்பேன் ....

உயிர் எதையோ தேடும்
மனம் அதையே நாடும்
தனித் தனியே ரெண்டும்
ஒரு வழியில் ஓடும்

எது எதற்கோ பொய்கள்
எதிர் எதிராய் மெய்கள்
எது எதுவாய் ஆகும்
விடை கடந்தே போகும்

கண்ணாடி முனை போல்
எண்ணங்கள் கூராய்
முன் இல்லாததைப் போல்
எல்லாமே வேறாய் உன்னாலே பூரிக்கிறேன்
உன் சிரிப்பு சரத்தில்
மகிழ மரத்தில்
பூ தைக்கிறேன்

கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் ....

https://www.youtube.com/watch?v=YGTG9n1tGnk





idhayam unnai theduthe lyrics-naan sigappu manithan tamil song lyrics / இதயம் உன்னை தேடுதே

Movie Name:Naan sigappu manithan
Song Name:Idhayam unnai
Singers:G.V.Prakash kumar,Saindhavi
Music Director:G.V.Prakash kumar
Cast:Vishal,Lakshmi menon
Year of release:2014



Lyrics:-

Venpanju megathil en nenjai nee vaithaai
Penne un punnagaiyil saaral naanadi
Kannukkul veedondru katti thaan vaithene
Ange nee vantha pinne kovil aanathe

Idhayam unnaith theduthe
Uyirum unnaith theduthe
Unnaith thedi oduthe uyirin uyire
Ninaivum unnaith theduthe
Nizhalum unnaith theduthe
Unnaitht thedi oduthe uyirin uyire

Adi penne iranthaalum un madiyil
Kanmoodath thaane odi vanthu uyir viduven
Oru paarvai nee paarthaal adhu pohum
Appothe naanum meendum
Man mel uyirthezhuven

Venpanju megathil...

Penne un nenjukkul sogangal koodaathu oh
Aanantha kanneeril azhuthaalum thaangaathu oh
Iraivaa oar varam kodu oh
Ivan endhan maganaagave thinanthorum azhavidu oh
Thaayaagi thaalaattave

Enge nee sendraalum en kaalgal eppodhum
Un pinne thaan nadakkum oh
Aagaayam saainthaalum boologam ointhaalum
Nam kaadhal thaan irukum oh

Venpanju  megathil ...

Idhayam unnai theduthe ....


வெண்பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி
கண்ணுக்குள் வீடொன்று கட்டி தான் வைத்தேனே
அங்கே நீ வந்த பின்னே கோவில் ஆனதே

இதயம் உன்னைத் தேடுதே
உயிரும் உன்னைத் தேடுதே
உன்னைத் தேடி ஓடுதே உயிரின் உயிரே
நினைவும் உன்னைத் தேடுதே
நிழலும் உன்னைத் தேடுதே
உன்னைத் தேடி ஓடுதே உயிரின் உயிரே

அடி பெண்ணே இறந்தாலும் உன் மடியில்
கண்மூடத் தானே ஓடி வந்து உயிர் விடுவேன்
ஒரு பார்வை நீ பார்த்தால் அது போதும்
அப்போதே நானும் மீண்டும்
மண்மேல் உயிர்த்தெழுவேன்

வெண்பஞ்சு மேகத்தில் ....

பெண்ணே உன் நெஞ்சுக்குள் சோகங்கள் கூடாது ஓ
ஆனந்த கண்ணீரில் அழுதாலும் தாங்காது ஓ
இறைவா ஓர் வரம் கொடு ஓ
இவன் எந்தன் மகனாகவே தினந்தோறும் அழவிடு ஓ
தாயாகி தாலாட்டவே

எங்கே நீ சென்றாலும் என் கால்கள் எப்போதும்
உன் பின்னே தான் நடக்கும் ஓ
ஆகாயம் சாய்ந்தாலும் பூலோகம் ஓய்ந்தாலும்
நம் காதல் தான் இருக்கும் ஓ

வெண்பஞ்சு மேகத்தில் ....

இதயம் உன்னை தேடுதே ....

https://www.youtube.com/watch?v=JiZMGxzXmk8



senthee vizhuntha lyrics-kochadaiiyaan tamil song lyrics / செந்தீ விழுந்த

Movie Name:Kochadaiiyaan
Song Name:Senthee vizhuntha
Singers:Srinias,Chinmayi
Music Director:A.R.Rahman
Lyricist:Vairamuthu
Cast:Rajinikanth,Deepika,Nasser
Year of release:2014



Lyrics:-

Senthee vizhuntha sempor paaraiyil
Manthi uruttum mayilin muttaiyaai
Idhayam

Nalla marathin narungilai yizhinthu
Velach suzhiyil vizhuntha malaraai
Idhayam
Nazhuvi nazhuvi nagarnthu nagarnthu poguthe

Yeno sol yeno
Yeno sol sol yeno solvaaya
Yeno sol sol yeno solvaaya

Idhayam
Karaigal maranthu thisaigal tholainthu poguthe

Yeno sol yeno
Yeno sol sol yeno
Yeno sol sol yeno solvaaya

Pooppathu maranthana kodigal
Punnagai maranthathu minnal
Kaaippathu maranthathu kaadu
Kaaviyam maranthathu yedu (2)

Yaano ninnai marakkilen
Ninnai marakkilen
Ninnai marakkilen

Idhayam nazhuvi nazhuvi
Nagarnthu nagarnthu poguthe

Yeno sol yeno
Yeno sol sol yeno
Yeno sol sol yeno solvaaya

Senthamizh piriyum sangam
Sengadal piriyum alaigal
Oliyaip piriyum kaatru
Uliyaip piriyum sirpam (2)

Yaano ninnaip pirigilen
Pirigilen pirigilen

Sirukottu perum paayum thoongiyaangu
En uyiro sirithu
Kaadhalo perithu

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய்
இதயம்

நல்ல மரத்தின் நறுங்கிளை யிழிந்து
வெள்ளச் சுழியில் விழுந்த மலராய்
இதயம்
நழுவி நழுவி நகர்ந்து நகர்ந்து நகர்ந்து
போகுதே

ஏனோ சொல் ஏனோ
ஏனோ சொல் சொல் ஏனோ சொல்வாய
ஏனோ சொல் சொல் ஏனோ சொல்வாயா
இதயம்
கரைகள் மறந்து திசைகள் தொலைந்து
போகுதே

ஏனோ சொல் ஏனோ
ஏனோ சொல் சொல் ஏனோ
ஏனோ சொல் சொல் ஏனோ சொல்வாயா

பூப்பது மறந்தன கொடிகள்
புன்னகை மறந்தது மின்னல்
காய்ப்பது மறந்தது காடு
காவியம் மறந்தது ஏடு (2)

யானோ நின்னை மறக்கிலேன்
நின்னை மறக்கிலேன்
நின்னை மறக்கிலேன்

இதயம் நழுவி நழுவி
நகர்ந்து நகர்ந்து நகர்ந்து போகுதே

ஏனோ சொல் ஏனோ
ஏனோ சொல் சொல் ஏனோ சொல்வாயா
ஏனோ சொல் சொல் ஏனோ சொல்வாயா

செந்தமிழ் பிரியும் சங்கம்
செங்கடல் பிரியும் அலைகள்
ஒலியைப் பிரியும் காற்று
உளியைப் பிரியும் சிற்பம் (2)

யானோ நின்னைப் பிரிகிலேன்
பிரிகிலேன் பிரிகிலேன்

சிறுகோட்டு பெரும்பாயும் தூங்கியாங்கு
என் உயிரோ சிறிது
காதலோ பெரிது

https://www.youtube.com/watch?v=G2xRJB0dkMY