Labels

megathil ondraai lyrics-kaadhal sadugudu tamil song lyrics / மேகத்தில் ஒன்றாய் நின்றோமே

Movie Name:Kaadhal sadugudu
Song Name:Megathil ondraai
Singers:Hariharan,Sujatha
Music Director:Deva
Cast:Vikram,Priyanka trivedi
Year of release:2003


Lyrics:-

Megathil ondraai nindrome anbe
Mazhai neeraai sidharip pogindrom anbe

Megathil ondraai nindrome anbe
Mazhai neeraai sidharip pogindrom anbe
Vidhi enbathaal nenjile bhaaram illai
Mazhai enbathu neerukku maranam illai
Meendum oru naal
Megam aagi vaanil sernthiduvom
Iruvarum koodi
Oru thuliyaagi muthaai maariduvom

Megathil ondraai nindrome anbe
Mazhai neeraai sidharip pogindrom anbe

Charanam - 1

Kannaik kavvum un kangalaik kaadhalithen
Karpaith thodum un paarvaiyaik kaadhalithen
Aasaik konda un aanmaiyak kaadhalithen
Meesaik konda un menmaiyaik kaadhalithen

Nilaa vizhum un vizhigalaik kaadhalithen
Nilam vizhum un nizhalaiyum kaadhalithen
Nettrith thodum un mudigalaik kaadhalithen
Nenjai moodum un udaigalaik kaadhalithen

Kanna sila naal theivom adhanaal
Uravaa sethu vidum
Kadal neer konjam megam aanaal
Kadalaa vattri vidum

Kiliyo pogum kaatrum oru naal
Veettukku thirumbi varum
Pirithal enbathu ilaiyuthir kaalam
Nichayam vasantham varum

Megathil ondraai nindrome anbe
Mazhai neeraai sidharip pogindrom anbe

Charanam - 2

Anbe anbe unai enganam pirinthiruppen
Nilaa vanthaal en nilavugal erinthiruppen
Unnai ennil en uyir balam udainthiruppen
Kannaal kannaal naan irumurai uyir tharippen

Anbe anbe unai enganam maranthiruppen
Niththam niththam un kanavugal idam pidippen
Penne penne nam pirivilum thunai iruppen
Kanne kanne en kangalai anuppi vaippen

Ithanai pirivu thagumo endru
Iyarkaiyai kaanbikkiren
Yen thaan avanaik kandaai endru
Kangalai thandikkiren

Piriyum podhum piriyam valarum
Pirinthe sinthippom
Vaazhkai enbathu vattachaalai
Meendum sandhippom

Megathil ondraai ....

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறிப் போகின்றோம் அன்பே

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறிப் போகின்றோம் அன்பே
விதியென்பதால் நெஞ்சிலே பாரமில்லை
மழையென்பது நீருக்கு மரணமில்லை
மீண்டும் ஒரு நாள் மேகம் ஆகி வானில் சேர்ந்திடுவோம்
இருவரும் கூடி ஒரு துளியாகி முத்தாய் மாறிடுவோம்

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறிப் போகின்றோம் அன்பே

சரணம் - 1

கண்ணைக் கவ்வும் உன் கண்களைக் காதலித்தேன்
கற்பைத் தொடும் உன் பார்வையைக் காதலித்தேன்
ஆசைக் கொண்ட உன் ஆண்மையைக் காதலித்தேன்
மீசைக் கொண்ட உன் மென்மையைக் காதலித்தேன்

நிலா விழும் உன் விழிகளைக் காதலித்தேன்
நிலம் விழும் உன் நிழலையும் காதலித்தேன்
நெற்றித் தொடும் உன் முடிகளைக் காதலித்தேன்
நெஞ்சை மூடும் உன் உடைகளைக் காதலித்தேன்

கண்ணா சில நாள் தெரிவோம் அதனால்
உறவா செத்துவிடும்
கடல் நீர் கொஞ்சம் மேகம் ஆனால்
கடலா வற்றி விடும்

கிளியோ போகும் காற்றும் ஒரு நாள்
வீட்டுக்கு திரும்பி வரும்
பிரிதல் என்பது இளையுதிர் காலம்
நிச்சயம் வசந்தம் வரும்

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறிப் போகின்றோம் அன்பே

சரணம் - 2

அன்பே அன்பே உனை எங்ஙனம் பிரிந்திருப்பேன்
நிலா வந்தால் என் நிலவுகள் எறிந்திருப்பேன்
உன்னை எண்ணி என் உயிர் பலம் உடைந்திருப்பேன்
கண்ணால் கண்ணால் நான் இருமுறை உயிர் தரிப்பேன்

அன்பே அன்பே உனை எங்ஙனம் மறந்திருப்பேன்
நித்தம் நித்தம் உன் கனவுக்குள் இடம் பிடிப்பேன்
பெண்ணே பெண்ணே நம் பிரிவிலும் துணை இருப்பேன்
கண்ணே கண்ணே என் கண்களை அனுப்பி வைப்பேன்

இத்தனை பிரிவு தகுமோ என்று
இயற்கையை காண்பிக்கிறேன்
ஏன் தான் அவனைக் கண்டாய் என்று
கண்களை தண்டிக்கிறேன்

பிரியும் போதும் பிரியம் வளரும்
பிரிந்தே சிந்திப்போம்
வாழ்க்கை என்பது வட்டச்சாலை
மீண்டும் சந்திப்போம்

மேகத்தில் ஒன்றாய் ....
 http://www.youtube.com/watch?v=mJVI09fL4j0

No comments:

Post a Comment